Advertisment

'உங்க குடும்பத்தை கவனமா பார்த்துக் கொள்ளுங்க': கோலி- கம்பீர் மோதலில் வீசிய உஷ்ண வார்த்தைகள்

தனது அணி வீரரை இழிவுபடுத்துவது தனது குடும்பத்தை இழிவுபடுத்துவதற்கு சமம் என கோலியிடம் கம்பீர் ஆவேசமாக பேசியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Virat Kohli vs Gautam Gambhir: conversation during the fight Tamil News

Gautam Gambhir and Virat Kohli had a heated fight during RCB vs LSG IPL match Tamil News

Virat Kohli vs Gautam Gambhir: conversation during the fight Tamil News: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், கடந்த திங்கள்கிழமை லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்கள் சேர்த்தது.

Advertisment

பெங்களூரு அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் 44 ரன்கள் எடுத்தார். லக்னோ அணி தரப்பில் நவீன் உல் ஹக் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 127 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய லக்னோ அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

கோலி – கம்பீர் மோதல்

இந்த ஆட்டத்திற்குப் பிறகு, மைதானத்தில் இரு அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என அனைவரும் ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி லக்னோ அணியின் தொடக்க வீரர் கெயில் மேயர்ஸ் உடன் நடந்து கொண்டே பேசிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் குறுக்கிட்ட லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் கெயில் மேயர்ஸின் கையைப் பிடித்துக் கொண்டு கோலி விட்டு விலகி அவரை கூட்டிச் சென்றார்.

publive-image

கோலி ஒருபுறமும் கம்பீர் ஒருபுறமுமாக சில அடிகள் நடந்து சென்ற நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மைதானத்திலே வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். இதனால், மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இரு அணி வீரர்களும் அங்கு குவிந்த நிலையில், இருவரையும் விலக்கி வைக்க கடுமையாக முயற்சித்தனர். இருவரும் கராசரமாக பேசிக்கொண்ட போது, லக்னோ வீரர் அமித் மிஸ்ரா உடனடியாக குறுக்கிட, அங்கிருந்தவர்கள் இருவரையும் தனித்தனியே அழைத்து சென்றனர்.

இருப்பினும், மைதானத்தில் கோலியும், கம்பீரும் வார்த்தை மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூகவலைதளத்தில் வைரலாகியது. கம்பீர் - கோலி இடையே மோதல் தொடங்கும் முன் ஆட்டத்தின் 17வது ஓவரின் போது லக்னோ வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக்கிற்கும், விராட் கோலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அபராதம்

இதனைத் தொடர்ந்து, மைதானத்தில் வார்த்தை மோதலில் ஈடுப்பட்ட லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் மற்றும் பெங்களூரு அணி வீரர் விராட் கோலிக்கு 100 % அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காகவும் ஐபிஎல் நடத்தை விதிகளின்படி லெவல் 2 குற்றங்களை ஒப்புக்கொண்டதால் இருவருக்கும் போட்டி கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், விராட் கோலியுடன் வார்த்தை மோதலில் ஈடுப்பட்ட லக்னோ வீரர் நவீன் உல் ஹக்கிற்கு 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோலி - கம்பீர் மோதல்: காரசாரமாக பேசியது என்ன?

இந்நிலையில், கோலி - கம்பீர் ஆகிய இருவருக்கும் இடையில் நடந்த மோதலின் போது, இருவரும் ஆவேசமாக உதிர்த்த வார்த்தைகளை உடன் இருந்த அணி நிர்வாகி ஒருவர் விவரித்துள்ளார்.

publive-image

கோலி - கம்பீர் இருவருக்கும் இடையிலான மோதலின் போது, கம்பீர்: 'களத்தில் என்ன சொன்னீர்கள்?' என்று கேட்க, அதற்கு கோலி: 'நான் உங்களை குறிப்பிட்டு எதுவும் சொல்லாதபோது நீங்கள் எதற்கு குறுக்கே வருகிறீர்கள்?' என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

தொடர்ந்து, கம்பீர், 'நீங்கள் எனது அணி வீரரை இழிபடுத்தி உள்ளீர்கள். அது எனது குடும்பத்தை இழிவுபடுத்தியற்கு சமம்.' என்றார். அதற்கு பதில் கொடுத்த கோலி, 'அப்படியென்றால், உங்கள் குடும்பத்தை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்.' என்று கூறியுள்ளார்.

கோலியின் இந்த பதிலால் மேலும் ஆக்ரோஷமடைந்த கம்பீர், 'நான் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டுமா?' பொங்கி எழுந்துள்ளார். கடைசியில் இருவரையும் இரு அணி வீரர்கள் விலக்கி வைத்தனர். இரு வீரர்களின் மோதல் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ள நிலையில், அவர்களது மோதலுக்கு பல முன்னாள் வீரர்கள் கடும் கண்டனம் தெரித்துள்ளனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Virat Kohli Sports Cricket Ipl Ipl Cricket Ipl News Lucknow Lucknow Super Giants Royal Challengers Bangalore Gautam Gambhir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment