Advertisment

ராஜஸ்தான் வீரர்களுக்கு ஜெர்சியில் கையெழுத்திட்ட தோனி… நெகிழ வைக்கும் வைரல் வீடியோ!

MS Dhoni Signs Jerseys of RR Players, this Heartwarming Gesture video Goes Viral Tamil News: சென்னை அணியின் கேப்டன் தோனி ராஜஸ்தான் அணி வீரர்களுக்கு ஜெர்சியில் கையெழுத்திட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்ட வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
May 21, 2022 15:09 IST
New Update
WATCH Viral VIDEO; Dhoni Signs Jerseys of RR Players

IPL 2022 Tamil News - MS Dhoni Signs Jerseys of RR Players

MS Dhoni Tamil News: 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கோலாகலமாக நடந்து வருகிறது. தற்போது இத்தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்றைய 68வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டம் இவ்விரு அணிகளுக்கும் கடைசி என்பதாலும், இதில் ராஜஸ்தான் அணி வெற்றி பெறும் பட்சத்தில் பட்டியலில் 2ம் இடத்திற்கு முன்னேறும். சென்னை அணி வென்றால் ஆறுதல் வெற்றியுடன் விடைபெறும் என்பதாலும் போட்டி பரபரப்பாக காணப்பட்டது.

Advertisment

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் (2), டெவோன் கான்வே (16) மற்றும் பின்னர் வந்த அம்பதி ராயுடு, என் ஜெகதீசன் போன்றோர் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். நிதானம் கலந்த அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மொயின் அலி 57 பந்துகளில் 13 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என 93 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். கேப்டன் தோனி 26 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்கள் சேர்த்தது.

தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் அணியில் அரைசதம் அடித்த தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 59 ரன்னில் அவுட் ஆனார். பட்லர் 2 ரன்னிலும், படிக்கல் 3 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். களத்தில் அதிரடியாக விளையாடி வந்த ஆல்ரவுண்டர் வீரர் அஸ்வின் தனது சிறப்பான ஆட்டத்தால் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவர் 23 பந்துகளில் 3 சிக்ஸர் 2 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் 19.4வது ஓவரில் நிர்ணயிக்கப்பட்ட 151 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை எட்டிப்பிடித்த ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்த அசத்தலான வெற்றியின் மூலம் அந்த அணி தற்போது புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலாவது தகுதிச் சுற்று ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் மே 24ம் தேதி அன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் அரங்கேறுகிறது.

ஜெர்சியில் தோனி கையெப்பம்…

இந்நிலையில், நேற்றைய ஆட்டத்திற்கு பிறகு ராஜஸ்தான் அணியில் உள்ள வீரர்களுடன் சென்னை அணியின் கேப்டன் தோனி பேசினார். அப்போது அந்த அணியில் உள்ள இளம் வீரர்கள் தோனியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும், வீரர்கள் கொண்டு வந்த சென்னை அணியின் ஜெர்சியில் அவர் கையொப்பமிட்டார். இது வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Chennai Super Kings #Sports #Cricket #Ipl #Ipl Cricket #Ipl News #Ms Dhoni #Csk Vs Rr #Chennai Super Kings Vs Rajasthan Royals #Ipl 2022
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment