Advertisment

தொடக்க வீரர் பந்தை தெறிக்கவிட்ட மார்கண்டே… இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ!

IPL 2022: MI VS SRH; Mayank Markande and Ishan Kishan net session video goes viral Tamil News: மும்பை அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷான் வீசிய பந்தில் மயங்க் மார்கண்டே சிக்ஸர் பறக்க விட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
May 17, 2022 12:37 IST
WATCH Viral Video; Mayank Markande Smashes Ishan Kishan For a Six in nets

Mayank Markande - Ishan Kishan net session viral video

IPL 2022 Tamil News: ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணிகளுள் ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் உள்ளது. 5 முறை சாம்பியன் பட்டத்தை வாகை சூடிய அந்த அணி நடப்பு தொடரில் தொடர் தோல்வி கண்டு மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. மேலும், இதுவரை நடந்த 12 ஆட்டங்களில் 3ல் மட்டும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது.

Advertisment

தற்போது பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்து விட்ட மும்பை அணியினர் நம்பிக்கையை தளரவிடாமல் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் மீதமுள்ள ஆட்டங்களில் வெற்றியை பதிவு செய்து பட்டியலில் கவுரமான இடத்தை பிடிக்க முயன்று வருகின்றனர்.

இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு அரங்கேறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகளைப் பெற்று 8-வது இடத்தில் உள்ளது. முதல் 2 லீக் ஆட்டங்களில் அடி வாங்கிய அந்த அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் வெற்றியை ருசித்தது.

ஆனால் கடைசி 5 ஆட்டங்களில் (குஜராத், சென்னை, டெ ல்லி, பெங்களூரு, கொல்கத்தா அணிகளிடம்) அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து தடுமாறி வருகிறது. இன்று நடைபெறும் ஆட்டம் ஐதராபாத் அணிக்கு வாழ்வா -சாவா? போராட்டமாகும். இதில் அந்த அணி தோற்றும் பட்சத்தில் அடுத்த சுற்று வாய்ப்பு பறிபோய்விடும். எனவே ஐதராபாத் அணி வெற்றியை ருசிக்கவே முயலும்.

இந்த ஆட்டத்திற்காக மும்பை அணியினர் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், மும்பை வீரர் இஷான் கிஷான் வீசிய பந்தில் மயங்க் மார்கண்டே சிக்ஸர் அடித்த வீடியோ வைரலாகி வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், மும்பை அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷான் மயங்க் மார்கண்டேவுக்கு பந்துவீசுகிறார். அந்த பந்தை லாவகாக பிக் செய்து இஷான் கிஷான் தலைக்கு மேல் பறக்க விடுகிறார் மார்கண்டே.

இந்த அதிரடி சிக்ஸரை பறக்க விட்ட மார்கண்டே அது என்ன ஒரு சிக்ஸர் என்று கூறுகிறார். ஆனால், இதை ஏற்க மறுத்த இஷான் கிஷான் மார்கண்டே பொய் கூறி ஏமாற்றுகிறார் என்று கூறி சிரிக்கிறார். தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு இந்த வீடியோ இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Cricket #Sports #Ipl 2022 #Sunrisers Hyderabad #Ipl News #Ipl Cricket #Ipl #Mumbai Indians #Mi Vs Srh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment