scorecardresearch

வீடியோ: ஷிகர் தவானை உதைத்துத் தள்ளிய தந்தை; என்னா அடி..!

Shikhar Dhawan being seated by his father, insta shared reels video goes viral tamil: நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாத பஞ்சாப் வீரர் தவானை அவரது அப்பா உதைத்து தள்ளும் வீடியோ சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

WATCH viral video; Shikhar Dhawan Knock out by his father after PBKS get knocked out
Shikhar Dhawan

Shikhar Dhawan Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக வலம் வருபவர் தொடக்க வீரர் ஷிகர் தவான். தனது சிறப்பான ஆட்டத்தால் தனக்கென ரசிகர் பெருங்கூட்டதை வைத்துள்ள இவர், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்துள்ளார். தற்போது இவரது இன்ஸ்டா பக்கத்தை மட்டும் 11 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள்.

இந்தியாவில் தற்போது ஐபிஎல் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடருக்கான பஞ்சாப் அணியில் இடம்பிடித்திருந்த அதிரடி வீரர் ஷிகர் தவான், அந்த அணியால் ரூ 8.25 கோடிக்கு இந்தாண்டு நடந்த மெகா ஏலத்தில் வாங்கப்பட்டார். நடப்பு தொடரில் அந்த அணியின் தொடக்க வீரராக களமாடிய அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

மேலும், நடைபெற்ற 14 லீக் ஆட்டங்களிலும் விளையாடிய அவர் 453 ரன்கள் எடுத்திருந்தார். அவரது அதிகபட்ச ரன் 88* ஆக உள்ளது. ஆனால், அவரது ஸ்ட்ரைக் ரேட் 120 ஆகவும், அவரது சராசரியாக 38.33 ஆகவும் இருப்பது அணிக்கு கொஞ்சம் கவலையாக இருந்தது.

ஷிகர் தவான் தொடக்க வீரராக களமாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியை மயங்க் அகர்வால் வழிநடத்தி இருந்த நிலையில், அந்த அணி 14 லீக் ஆட்டங்களில் 7 வெற்றி 7 தோல்விகளுடன் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்தது. அந்த அணி இன்னும் ஒரு ஆட்டத்தை நல்ல ரன்ரேட்டுடன் வெற்றி பெற்றிருந்தால் பிளே ஆஃப் வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால், வாய்ப்பை தவற விட்டு சோகத்துடன் வெளியேறியது.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஷிகர் தவான் அவ்வப்போது சிரிப்பான ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்து தனது ரசிகர்களை குஷிப்படுத்துவண்டு. அந்த வகையில் சமீபத்தில் அவர் பதிவிட்டுள்ள வீடியோவில், தவானின் தந்தை தனது மகனை அடித்து உதைத்து பிரட்டுகிறார். அப்போது அவரது குடும்பத்தினர் அவரது தந்தையை தடுக்க முற்படுகின்றனர். ஆனால், அவர் தொடர்ந்து தவானை அடித்து மிதிக்கிறார்.

ஷிகர் தவான் அந்த வீடியோவின் கேப்ஷனில், “நாக் அவுட்களுக்கு தகுதி பெறாதததால் என் அப்பாவால் நாக் அவுட் செய்யப்பட்டேன்” என்று சிரிப்பலையுடன் குறிப்பிட்டுள்ளார். தற்போது அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Tamil App.

Web Title: Watch viral video shikhar dhawan knock out by his father after pbks get knocked out

Best of Express