ஆசிரியர் தினத்தை ஒட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், கேப்டன் தோனியை கவுரவிக்கும் வகையில், வாத்தி கம்மிங் தோனி வெர்சன் பாடலை வெளியிட்டுள்ளது.
Advertisment
இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் 19ம் தேதி, ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்க உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பெறாதநிலையில், இந்த தொடர் குறித்த எதிர்பார்ப்பை எகிற வைக்கும் முயற்சியில் அணி நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், ஆசிரியர் தினத்தையொட்டி, கேப்டன் மகேந்திர சிங் தோனியை கவுரவப்படுத்தும் விதமாக மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலின் தோனி வெர்சனை, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இதில் “வாத்தி கம்மிங்” என தோனி கெத்தாக நடந்து வருவது, பயிற்சி எடுப்பது, சிக்ஸர் அடிப்பது என சிஎஸ்கே நிர்வாகம் அதகளப்படுத்தி இருக்கிறது.
ஐபிஎல் தொடருக்கான கமாண்டேட்டர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் சஞ்சய் மஞ்சரேக்கரின் பெயர் இடம்பெறாதது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், ஐபிஎல் தொடரின் அதிகாரப்பூர்வ அட்டவணை, இந்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சீசனில், 1 ரன்னில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் சாம்பியன் வாய்ப்பை தவறவிட்ட சிஎஸ்கே, இந்த முறை நிச்சயம் சாம்பியன் பட்டம் வெல்வார்கள் என்பது சிஎஸ்கே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
A teacher gives you many valuable lessons in your journey. Forever grateful for the ones I got from my coach Mr. Rajkumar Sharma ????????. Happy Teacher's Day to all the teachers who've guided their students in their journeys. pic.twitter.com/LPnUXsIzhp
ஆசிரியர் தினத்தை ஒட்டி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, டுவிட்டரில் தனது குழந்தைப்பருவ பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மாவின் போட்டோவை பகிர்ந்து தன் கடந்த கால நினைவுகளையும், ஆசிரியர்களின் மகத்துவத்தை விளக்கியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil