‘வாழ்க்கை ஒரு வட்டம்’ வெர்ஷன் 2.0 – அதே டார்கெட், அதே டீம், அதே துவம்சம்!

329 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, உலக சாம்பியன் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தது

By: Updated: August 5, 2020, 11:05:50 PM

‘கட்டத்துரைக்கு கட்டம் சரியில்ல; என் கூட விளையாடுறதே வேலையாப் போச்சு’ என்று மீண்டும் ஒருமுறை இங்கிலாந்தை புலம்ப வைத்திருக்கிறது அயர்லாந்து அணி.

இங்கிலாந்து – அயர்லாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு ஆட்டங்களில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 49.5. ஓவரில் 328 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. கேப்டன் இயன் மோர்கன் 84 பந்தில் 15 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 106 ரன்கள் குவித்தார். டாம் பேண்டன் 51 பந்தில் 58 ரன்களும், டேவிட் வில்லே 42 பந்தில் 51 ரன்களும் எடுத்தனர்.

இப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்!? (வீடியோ)

பின்னர் 329 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணியில், தொடக்க வீரர்களாக பால் ஸ்டிர்லிங், காரேத் டேலனி ஆகியோர் களம் கண்டனர். டேலனி 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து பால் ஸ்டிர்லிங் உடன் அண்ட்ரூ பால்பிரைன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இங்கிலாந்தின் பந்து வீச்சை துவம்சம் செய்தது. இருவரும் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். பால் ஸ்டிர்லிங் 128 பந்தில் 142 ரன்களும், பால்பிரைன் 112 பந்தில் 113 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இருவரும் ஆட்டமிந்தபோது அயர்லாந்து 44.3 ஓவரில் 279 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 33 பந்தில் 50 ரன்கள் தேவைப்பட்டது. ஹாரி டெக்டர் 26 பந்தில் 29 ரன்களும், கெவின் ஓபிரைன் 15 பந்தில் 21 ரன்களும் அடிக்க 49.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, உலக சாம்பியன் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தது.

9 ஆண்டுகளுக்கு முன்பு உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சியளித்த அயர்லாந்து, இப்போது மீண்டும் அதே இலக்கில் வென்றிருப்பது ‘வாழ்க்கை ஒரு வட்டம்’ என்பதின் 2.0 வெர்ஷனோ என்று யோசிக்க வைத்திருக்கிறது. அப்போதும், இங்கிலாந்து நிர்ணயித்த டார்கெட் 329 தான்.

டியூக் Vs கூக்கபுரா Vs எஸ்ஜி – பேட்ஸ்மேன்ஸ் அலறும் கிரிக்கெட்டின் ‘மூன்றுமுகம்’

தோனியை ஓவர்டேக் செய்த மோர்கன்

கேப்டனாக சர்வதெச கிரிக்கெட்டில் தோனி 211 சிக்சர்கள் என்ற சாதனையை தன் வசம் வைத்திருந்தார், அதை இயான் மோர்கன் தற்போது முறியடித்துள்ளார்.

3வது ஒருநாள் போட்டியில் 15 பவுண்டரிகள், 4 சிக்சர்களை விளாசினார்.

ஒட்டுமொத்தமாக அதிக சிக்சர்களில் 534 சிக்சர்களுடன் கிறிஸ் கெய்ல் முதலிடம் வகிக்கிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Ireland beat england 3rd odi cricket news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X