Advertisment

இளம் வீரர்களுடன் இந்தியா; முழு பலத்துடன் அயர்லாந்து: சஞ்சு சாம்சனை வீழ்த்த அயர்லாந்து ஸ்பின்னர் சபதம்

தான் ஆட்டமிழக்க வைக்க விரும்பும் பேட்டர்களில் சஞ்சு சாம்சனை தனது விருப்பப்பட்டியலில் முதலிடத்தில் வைத்திருப்பதாக அயர்லாந்து சுழற்பந்து வீச்சாளரான பெஞ்சமின் ஒயிட் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Ireland spinner Ben White on Sanju Samson wicket dismiss Tamil News

இந்தியாவுக்கு எதிரான கடைசி இரண்டு சொந்த தொடரில், அவர்கள் இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஒயிட்வாஷ் செய்யப்பட்டனர்.

Ireland spinner Ben White Tamil News: வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக அயர்லாந்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டி தொடரில் விளையாடுகிறது. இதற்காக, ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ளது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி டப்ளினில் நாளை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 18 ஆம் தேதி) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது

Advertisment

இந்த தொடரில் சீனியர் வீரர்கள் பலருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், பும்ரா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனால், வழக்கமான கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ஓய்வில் உள்ளனர்.

பும்ரா வழிநடத்தும் இந்திய அணிக்கு சி.எஸ்.கே நட்சத்திர வீரரான ருத்ராஜ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று சி.எஸ்.கே அணியின் சிவம் துபேவிற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஐ.பி.எல் 2023 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜிதேஷ் சர்மா, ரிங்கு சிங் போன்ற வீரர்களும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இந்திய தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங், திலக் வர்மா, அவேஷ் கான் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்குப் பிறகு இந்திய டி20 அணியில் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர். யுஸ்வேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் இல்லாத நிலையில், அயர்லாந்துக்கு எதிராக சுழற்பந்து வீச்சாளர்களான ரவி பிஷ்னோய், ஷாபாஸ் அகமது மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய வீரர்கள் இருப்பார்கள்.

அயர்லாந்து ஸ்பின்னர் சபதம்

அயர்லாந்து அணியைப் பொறுத்தவரை, இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் அயர்லாந்து இன்னும் வெற்றிபெறவில்லை. இந்தியாவுக்கு எதிரான கடைசி இரண்டு சொந்த தொடரில், அவர்கள் இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஒயிட்வாஷ் செய்யப்பட்டனர். ஆனால், சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு சாதகமாக இருக்கும். மேலும், தங்களால் விஷயங்களை மாற்ற முடியும் என அயர்லாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான பெஞ்சமின் ஒயிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பி.பி.சி-க்கு அளித்துள்ள பேட்டியில் அவர், "அது எங்களது நாளாக இருந்தால், எங்களால் யாரையும் வெல்ல முடியும். அப்படி என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், நம்ப வேண்டும். சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது மிகப்பெரியது. அவர்கள் உலகின் சிறந்த அணி. ஆனால் நாங்கள் சவாலை அனுபவித்து வருகிறோம்." என்று கூறினார்

publive-image

மேலும் பேசிய பெஞ்சமின் ஒயிட், தொடரில் தான் விக்கெட் வீழ்த்த விரும்பும் இந்திய பேட்ஸ்மேனின் பெயரையும் தெரிவித்தார். தான் ஆட்டமிழக்க வைக்க விரும்பும் பேட்டர்களில் சஞ்சு சாம்சனை தனது விருப்பப்பட்டியலில் முதலிடத்தில் வைத்திருப்பதாகவும், அவர் சுழற்பந்து வீச்சை சிறப்பாக கையாண்டாலும், தொடரின் போது அவர் டிஃபென்ஸ் ஆட மாட்டார் என்றும் தெரிவித்தார்.

"கடந்த ஆண்டுகளில் அவர் மிகவும் திறமையாக செயல்பட்டுள்ளார். இதேபோல், இந்திய அணியிலும் சில அற்புதமான வீரர்கள் உள்ளனர். உண்மையில், யாருடைய விக்கெட்டை கைப்பற்றினாலும் நான் மகிழ்ச்சியாக இருப்பேன். அவர்கள் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை எளிதில் சமாளிக்கக் கூடியவர்களாக உள்ளனர். ஆனால் நான் இன்னும் டிஃபென்ஸ் செய்து விளையாடுவேன் என்று நினைக்கவில்லை. நான் விக்கெட்டுகளை வீழ்த்தி தாக்க முயற்சிப்பேன்.

எல்லோரும் உற்சாகமாக இருக்கிறார்கள். நாங்கள் செய்யும் விதத்தில் விளையாடுவதன் மூலம் அழுத்தத்தை அகற்றுவோம். ஒவ்வொரு பந்தும் ஒரு நிகழ்வு, நாம் அவற்றை விட ஒரு படி மேலே இருக்க வேண்டும். நாங்கள் அதை அனுபவிப்போம்." என்று பெஞ்சமின் ஒயிட் கூறினார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Cricket Jasprit Bumrah India Vs Ireland
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment