IPL 2024 | Chennai Super Kings | Irfan Pathan | Ms Dhoni | Punjab Kings: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 2 ஆட்டங்கள் நடைபெற்றன. பிற்பகல் 3:30 மணிக்கு இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலா நடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தின் போது 9-வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்ததற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜாம்பவான் வீரர் எம்.எஸ் தோனியை இந்தியாவின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் கடுமையாக சாடியுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: MS Dhoni batting at No.9 doesn’t work for CSK: Irfan Pathan
நடப்பு சீசனில் இதுவரை 7 போட்டிகளில் பேட்டிங் ஆடியுள்ள தோனி 55 சராசரி மற்றும் 224.49 ஸ்டிரைக் ரேட்டில் 110 ரன்களைக் குவித்துள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிராக சென்னையில் நடந்த போட்டியில் 14 ரன்கள் எடுத்த தோனி போட்டியின் கடைசி பந்தில் ரன்-அவுட் ஆனார். ஆனால், நேற்று நடந்த ஆட்டத்தில், இந்த சீசனில் முதல் முறையாக தோனி 9வது இடத்தில் பேட்டிங் செய்தார். ஹர்ஷல் படேல் வீசிய 18.5 வது பந்தில் தோனி கோல்டன் டக் ஆகி வெளியேறினார்.
தோனி ஆட்டமிழந்து குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பேசிய இர்பான் பதான். .“எம்எஸ் தோனி 9வது இடத்தில் பேட்டிங் செய்வது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எந்த வித பலனும் அளிக்கப் போவதில்லை. இதேபோல், அணிக்கு உதவவும் செய்யாது. அவருக்கு வயது 42 என்று எனக்குத் தெரியும், ஆனால் அவர் திடமான நிலையில் இருக்கிறார்.
டாப் ஆடரில் பேட் செய்யும் பொறுப்பை அவர் ஏற்க வேண்டும். அவர் குறைந்தது 4 முதல் 5 ஓவர்கள் வரை பேட்டிங் செய்ய வேண்டும். அவர் கடைசி ஓவர் அல்லது கடைசி 2 ஓவர்களுக்கு பேட்டிங் செய்கிறார், அது நீண்ட காலத்திற்கு சி.எஸ்.கே அணிக்கு உதவாது."
சி.எஸ்.கே அணி இங்கிருந்து பிளேஆஃப்களுக்கு தகுதி பெறுவதைப் பார்க்கலாம். ஆனால், அவர்கள் 90 சதவீத ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும். ஃபார்மில் இருக்கும் ஒரு மூத்த வீரராக, அவர் ஒழுங்கை பேட் செய்ய வேண்டும். சில சமயங்களில் செய்ததையே அவரால் மீண்டும் செய்ய முடியாது.
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தாக்கத்தை அவர் ஏற்படுத்தினார், ஆனால் இங்கே, அணிக்கு அவரைத் தேவைப்படும்போது, உங்களால் ஷர்துல் தாக்கூரை மேலே பேட்டிங் செய்ய அனுப்ப முடியாது. 9வது இடத்தில் தோனி பேட்டிங் செய்வதை உங்களால் பார்க்க முடியாது.
15வது ஓவரில் சமீர் ரிஸ்வி பேட்-அப் செய்து அமர்ந்து இருந்தார். அவர்கள் ஏதாவது வேலை செய்ய வேண்டும். 4 ஓவர்கள் பேட் செய்யுங்கள் என்று தோனியிடம் யாராவது சொல்ல வேண்டும்.” என்று அவர் கூறினார்.
ஐ.பி.எல் 2024 தொடரில் வருகிற வெள்ளிக்கிழமை (மே.10) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வைத்து குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.