இந்தியாவைச் சேர்ந்த சிறந்த இடக்கை ஸ்விங் பந்துவீச்சாளரான இர்பான் பதான், 2003-ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் டாப் 3 ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவராக திகழ்ந்தார். கிரேக் சாப்பலின் ஆதரவு இவருக்கு அதிகம் இருந்தது. ஆனால், 2007-க்குப் பிறகு சொதப்பலான பந்துவீச்சால், அணியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டப்பட்டார்.
இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோவுக்கு தனது கிரிக்கெட் அனுபவங்கள் குறித்து பதான் பேட்டியளித்துள்ளார். அதில், "சர்வதேச போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் பாகிஸ்தானின் இன்சமாம்-உல்-ஹக் ஆகியோருக்கு நான் பந்து வீச அதிகம் சிரமப்பட்டுள்ளேன். இவர்கள் எப்படி போட்டாலும் அடிப்பார்கள். நம்மை யோசிக்கவே விட மாட்டார்கள்.
அதேசமயம், வலைப் பயிற்சியில் சச்சின் மற்றும் லக்ஷ்மனுக்கு பந்து வீசுவது மிகவும் கஷ்டம். ஆனால், அவர்கள் விளையாடிய அணியில் நான் இடம்பெற்றிருந்தால் தப்பித்தேன். அவர்களுடன் இணைந்து விளையாடியதை நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். சச்சினும், லக்ஷ்மனும் மிகச் சிறந்த வீரர்கள்" என்றார்.