முடங்கிக் கிடந்த கிரிக்கெட் உலகை Resume செய்த பிறகு, ஆர்ப்பாட்டமாக வருகிறது, இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர். மூன்று போட்டிகள் டெஸ்ட் தொடரில், முதல் போட்டியில் விண்டீஸும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தும் வென்றன.
மான்செஸ்டரில் நடந்த இரண்டாவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் 176 (356), 2வது இன்னிங்ஸில் 78 (57) * என்று ஒரே போட்டியில் டிராவிட்டாகவும், ஷேவாக்காவும் வெரைட்டி பெர்ஃமான்ஸ் காட்டி, அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி இருக்கிறார் பென் ஸ்டோக்ஸ் . பவுலிங்கிலும் குறைவில்லாமல் விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருக்கிறார்.
கிரிக்கெட் உலகமே, இவரது மேட்ச் வின்னிங் திறமையை உச்சிமுகர்ந்து தற்போது பாராட்டிக் கொண்டிருக்கிறது. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மனம் திறந்து, பென் ஸ்டோக்ஸை 'Mr Incredible' என்று பாராட்டியது மட்டுமின்றி, எங்கள் அணியின் சொத்து என்று காப்பி ரைட்ஸே வாங்கிவிட்டார்.
இவ்வளவு பாராட்டுக்களும், பெருமைக்கும் இந்தவொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் அவர் சாதித்ததற்காக மட்டுமில்ல, கடந்த சில ஆண்டுகளாகவே அவர் இங்கிலாந்து அணிக்கு ஆற்றிவரும் அளப்பறியா பணிக்கான விருது. இது அத்தனைக்கும் அவர் 100% தகுதியானவர்.
இவ்வளவு ஏன், 2019ல் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சூப்பர் ஓவர் வரை உயிரை கொடுத்து போராடி, அணிக்கு கோப்பையை பெற்றுத் தந்தாரே. இதைவிட வேறு என்ன பெருமை இவருக்கு வேண்டும்.
எல்லாம் சரி... ஆனால், பென் ஸ்டாக்ஸை புகழ்ந்து நம்மூர் இர்பான் பதான் பதிவிட்டிருக்கும் ட்வீட் தான் சற்று புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாகப்பட்டது, "பென் ஸ்டோக்ஸ் போன்ற ஒரு ஆல் ரவுண்டர் இந்திய அணியில் இருந்தால், உலகில் எங்கும் வீழ்த்த முடியாத அணியாக இந்திய அணி திகழும்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
Indian cricket will be unbeatable anywhere in the world if they have a match winning all rounder like @benstokes38 #matchwinner
— Irfan Pathan (@IrfanPathan) July 21, 2020
முதலில், 'வீழ்த்த முடியா அணி' என்ற புகழுரை வார்த்தை சும்மா ஒரு மோட்டிவேஷனுக்கு தான் என்றாலும் கூட, பிராக்டிக்கலாக இந்த டெர்ம் தவறு. உலகில், எந்த விளையாட்டாக இருந்தாலும், எப்பேற்பட்ட அணியாக இருந்தாலும், தோற்கடிக்கவே முடியாது என்பதெல்லாம் கிடையாது.
2000 - 2007 காலக்கட்டத்தில் உலகின் அதி பயங்கரமான அணியாக கருதப்பட்ட ஆஸ்திரேலியா, உலகின் மற்ற அணிகளை வீழ்த்தினாலும், அவ்வப்போது கங்குலி தலைமையிலான இந்திய அணியிடம் உதைப்பட்டுக் கொண்டே இருந்ததை நாம் மறந்துவிட முடியுமா?
சரி விஷயத்துக்கு வருவோம்,
'பென் ஸ்டோக்ஸ் போன்ற ஒரு ஆல் ரவுண்டர் இந்திய அணியில் இருந்தால், உலகில் எங்கும் வீழ்த்த முடியாத அணியாக இந்திய அணி திகழும்' என்று இர்பான் கூறிய ஸ்டேட்மென்ட் படி பார்த்தால்,
இந்திய அணியில் திறமையான ஆல் ரவுண்டர்கள் இல்லை என்கிறாரா?
அப்படியெனில் ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா போன்றோரின் திறமையை அவர் சாதாரணமான ஒன்றாக கருதுகிறாரா?
இத்தனை ஆண்டுகளாக எத்தனையோ ஆல் ரவுண்டர்கள் இந்திய அணியில் விளையாடி இருக்கின்றனர். இந்தியா வெற்றியும், தோல்வியும் அடைந்திருக்கிறது. அப்படியெனில், அவர்கள் எல்லாம் சாதாரண ஆல் ரவுண்டர்கள் என்கிறாரா?
கபில் தேவ், நாம் இந்தியாவில் கொண்டாடும் தரமான ஆல் ரவுண்டர். அவர் காலத்தில் இந்தியா வெற்றி, தோல்வியை மாறி மாறி சந்தித்தது. அப்படியெனில், கபில் தேவ்-வை விட பென் ஸ்டோக்ஸ் சிறந்த ஆல் ரவுண்டர் என்று கூறுகிறாரா?
இவ்வளவு ஏன், அதே பென் ஸ்டோக்ஸை வைத்துக் கொண்டு, அதுவும் கேப்டனாக கொண்டு விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இன்டீஸிடம் இங்கிலாந்து தோற்கலையா?
நீங்களே கூட ஒரு ஆல் ரவுண்டர் தானே இர்பான் பிரதர்?
சும்மா பாராட்டணும்-ங்கிறதுக்காக வாய்க்கு வந்ததை எல்லாம் பேசக் கூடாது.
இப்படியெல்லாம் நாங்க கேக்கலீங்கோ.... ரசிகர்கள் கேட்குறாங்க...!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.