Kambala Jockey Srinivasa Gowda faster than Usain Bolt : உசைன் போல்ட்டை விட மிகவும் வேகமாக ஓடும் மனிதர். கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் எருமை மாடுகளுடன் 100 மீட்டர் தூரத்தை வெறும் 9.55 நொடிகளில் கடந்துள்ளார். அத்லெடிக்ஸ் அசோஷியேஷன் ஆப் இந்தியா இந்த மனிதரை தேர்வு செய்து ஒலிம்பிக்கிற்கு அனுப்ப வேண்டும் என சசி தரூர் நேற்று காலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார். ஸ்ரீனிவாச கவுடா என்ற 28 வயது மனிதர் கம்பாளா போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவருடைய இந்த சாதனை ஒரே நாளில் இவரை உசேன் போல்ட் உடன் ஒப்பிட்டு பேசும் அளவிற்கு புகழ் அடைய வைத்து விட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”
சீனிவாச கவுடாவை நேரில் அழைத்து பயிற்சிகள் கொடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார். இந்த கம்பளா போட்டிக்காக கடந்த 7 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வருகிறார் ஸ்ரீனிவாச கவுடா. பிப்ரவரி ஒன்றாம் தேதி நடைபெற்ற கம்பளா போட்டியில் 142.5 மீட்டர் தூரத்தை 13.62 நொடிகளில் கடந்த தன் காரணமே இவரை உசேன் போல்ட் உடன் ஒப்பிட்டு பேச வைத்திருக்கிறது. நூறு மீட்டரை 9.55 நொடிகளில் கடந்துள்ளார். இந்த உசேன் போல் செய்த சாதனையை விட மிகவும் வேகமானது.
Srinivasa Gowda (28) from Moodabidri in Dakshina Kannada district. Ran 142.5 meters in just 13.62 seconds at a "Kambala" or Buffalo race in a slushy paddy field. 100 meters in JUST 9.55 seconds. pic.twitter.com/mphRcbFRKi
— Omkar Shetty???????? (@omkar_shettyg) February 15, 2020
ஆனால் இந்த மகிழ்ச்சி கொண்டாட்டம் சரியானதா மாடுகளை துரத்திக் கொண்டு ஓடும் ஒரு மனிதரை ஒட்ட பந்தாட்ட போடு மனிதரோடு ஒப்பிடுவது சரியா? லாஜிக்குடன் இருக்கிறதா? என்று கேள்விகள் எழுகிறது. சசிதரூரின் ட்விட்டரில் விளையாட்டு துறை செய்தியாளர் பார்னே ரோனாய், மாடுகளும் தான் ஓடுகிறது. அவைகளும் உசைன் போல்ட்டை விட வேகமாகவே. பார்த்தால் அங்கு நிறைய திறமைசாலிகள் இருக்கிறார்கள் போல என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவில் நிறைய உசைன் போல்ட்டுகள்
கடந்த ஆண்டு இதே போன்று இரண்டு நிகழ்வுகள் இந்தியாவில் அரங்கேறியது. ஒன்று மத்யபிரதேசம் மாநிலத்தில். ராமேஸ்வர் குர்ஜார் என்பவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் 100 மீட்டர் தூரத்தை வெறும் 11 நொடிகளில் கடந்தார். அதுவும் கால்களில் ஷூக்கள் ஏதும் இல்லாமல். இது இந்த வீடியோ வைரலாகவும் பலரும் அவரை உசைன் போல்ட் என்று அழைத்தனார். ஆனால் அவருக்கான பயிற்சி ஓட்டத்தின் போது அவர் அனைவரையும் ஏமாற்றும் விதத்தில் மிகவும் மெதுவாகவே ஓடி வந்தார். அவருக்கான சரியான பயிற்சி வழங்கப்படும் என்று ரிஜ்ஜு அறிவித்தார்.
அதற்கு முன்னர், 2018 ஆம் ஆண்டில் தொடர்ச்சியான போட்டிகளில் வெற்றி பெற்று நாட்டின் இதயங்களில் ஓடிய ஹிமா தாஸ் - 2019 இல் 'ஐரோப்பாவில் ஒரு மாதத்தில் ஐந்து தங்கப் பதக்கங்களை' வென்றதாகக் கூறப்பட்டது. ஹிமா வென்ற பந்தயங்கள் ஐரோப்பாவில் பந்தயங்கள் நடத்தப்பட்டிருந்தாலும், அவரது போட்டியாளர்கள் பெரும்பாலும் இந்தியர்களாகவே இருந்தனர் என்பதும், இந்திய விளையாட்டு வீரர்களுக்கு ஐரோப்பாவில் பயிற்சி முகாம்களை நடத்துவதும் கவனிக்க வேண்டிய ஒன்று.
இந்திய தடகள வீரர்கள் குறித்து பாராட்டுகள் இல்லாமல் இருப்பது எதை குறிக்கிறது? குறிப்பிடத்தகுந்த போட்டிகளில் நம்பிக்கை நட்சத்திரங்கள் என யாரும் இல்லையா? ஒரு தடகள வீரரின் அதிக தீவிரம் கொண்ட செயல்திறனைப் சில நொடிகளில் பார்க்கும்போது ஏற்படும் சிலிர்ப்பைக் காட்டிலும் ஸ்கோர்போர்டில் காண்பிக்கப்படும் நேரங்கள் அல்லது தூரங்கள் சாதாரண ரசிகர்களுக்கு மிகவும் குறைவான கவர்ச்சியைக் கொண்டிருப்பதை காரணமாக எடுத்துக் கொள்ளலாமா?
மாடுகளுடனே ஓடியிருந்தாலும் கூட இங்கு விவாதிக்கப்பட்டது எல்லாம் அவருடைய கட்டுடல் பற்றியும், எவ்வளவு பழமை வாய்ந்தது இந்த கம்பளா போட்டிகள் என்பது தான். அவருடைய உடற்கட்டினை பாருங்கள். அவரால் நிச்சயமாக சிறந்த தடகள வீரராக வர இயலும் என்று ஆனந்த் மகிந்திரா கூறியுள்ளார். 9.55 வினாடிகளில் 100 மீட்டர் தொலைவை எட்டியுள்ளார் என்பது குறித்து அவர்கள் யாரும் பேசவில்லை. கவுடாவின் ‘9.55 வினாடிகளில் 100 மீட்டர்’ வேகம் பெரும்பாலும் அவரது எருமைகளின் வேகத்தினால் தான்.
எருமைகள் சாதாரணமாகவே ஒரு மணி நேரத்திற்கு 35 மைல்கள் வரை ஓடக்கூடியவை. ஆனால் கம்பளாவிற்கு வளர்க்கப்படும் மாடுகளோ பயிற்சிக்குப் பிறகு அதனை விட வேகமாக ஓடும். கவுடா, கட்டிடத் தொழில் செய்து வருகிறார். அவருடைய இந்த வெற்றி அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் உசைன் போல்ட்டுடனான ஒப்பீட்டு குறித்து பேசும் போது “உசைன் போல்ட் உலக அளவில் மிகப்பெரிய வீரர். நானோ சேற்று விளை நிலத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றேன். என்னுடைய வெற்றியை நான் என்னுடைய எருமைகளுக்கும் சமர்பிக்கின்றேன்” என்று கூறியுள்ளார் அவர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.