Is R Jadeja entering into politics? Fans reaction on his recent post Tamil News - மனைவி வழியில் அரசியலில் குதிக்கிறாரா ஜடேஜா? திடீர் கெட் அப்; ரசிகர்கள் ரியாக்ஷன் | Indian Express Tamil

மனைவி வழியில் அரசியலில் குதிக்கிறாரா ஜடேஜா? திடீர் கெட் அப்; ரசிகர்கள் ரியாக்ஷன்

ரிவாபா ஜடேஜா தற்போது குஜராத் பாஜக எம்.எல்.ஏ ஆகியுள்ள நிலையில், தற்போது ரவீந்திர ஜடேஜாவும் மனைவி வழியில் அரசியலில் குதிக்கிறாரா? என்பது போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளனர் ரசிகர்கள்.

Is R Jadeja entering into politics? Fans reaction on his recent post Tamil News
Ravindra Jadeja wife Rivaba Jadeja's won in the 2022 Gujarat Assembly elections Jamnagar North Tamil News

Ravindra Jadeja in traditional Tamil attire; Fans reaction Tamil News: இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி ஆல்-ரவுண்டர் வீரராக வலம் வருபவர் ரவீந்திர ஜடேஜா. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ரிவாபா சோலங்கியை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார்.

இந்நிலையில், 32 வயதான ரிவாபா ஜடேஜா, கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவில் முறையாக இணைந்தார். அவருக்கு 2022 ஆம் ஆண்டுக்கான குஜராத் சட்டபேரவைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் கிடைத்தது. அதன்படி, ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு காயம் காரணமாக ஓய்வில் இருந்த கணவர் ரவீந்திர ஜடேஜா, ஜாம்நகர் தொகுதியில் களமிறங்கி வாக்குகளை சேகரித்தார். மேலும், இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் அவர் ஆதரவு கோரினார்.

ரிவாபா ஜடேஜா அமோக வெற்றி

இந்த நிலையில், நடைபெற்று முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8 ஆம் தேதி நடந்தது. அன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது ரிவாபா ஜடேஜா தோல்வியைத் தழுவ வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது. அப்போது அவர் 3வது இடத்திலும், காங்கிரஸ் 2வது இடத்திலும் ஆம் ஆத்மி முதலிடத்திலும் இருந்தனர். பின்னர், பிற்பகல் வாக்கு எண்ணிக்கையின் போது தொடர்ந்து படிப்படியாக முன்னிலை வகிக்க ஆரம்பித்தார் ரிவாபா. இறுதியில் அவர் 53,570 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 156 இடங்களைக் கைப்பற்றி, வரலாறு காணாத வெற்றி பெற்றது. ஏற்கெனவே 6 முறை ஆட்சி அமைத்த அக்கட்சி தற்போது 7-வது முறையாக ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்தது. குஜராத்தின் 18-வது முதல்வராக பூபேந்திர ரஜினிகாந்த் படேலுக்கு, ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். தொடர்ந்து, 16 அமைச்சர்களும் பதவிஏற்றுக் கொண்டனர்.

மனைவி வழியில் அரசியலில் குதிக்கிறாரா ஜடேஜா? திடீர் கெட் அப்; ரசிகர்கள் ரியாக்ஷன்

ரிவாபா ஜடேஜா தற்போது பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஆகியுள்ள நிலையில், தற்போது ரவீந்திர ஜடேஜாவும் மனைவி வழியில் அரசியலில் குதிக்கிறாரா? என்பது போன்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு காரணம், ஜடேஜா இன்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள புகைப்பட பதிவு தான். அந்தப் பதிவில் ஜடேஜா வேட்டி சட்டையில் போஸ் கொடுக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் புகைப்படத்திற்கு லைக்ஸ் தட்டிச் சென்றதோடு, அவரும் தனது மனைவியைப்போல் அரசியலில் களமாடுகிறாரா? என்பது போன்ற கமெண்ட்ஸ்களை விட்டுச் சென்றுள்ளனர்.

ஜடேஜாவின் பதிவிற்கு ரசிகர்களின் கமெண்ட்டுகள்:

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Is r jadeja entering into politics fans reaction on his recent post tamil news