Ishan Kishan | Indian Cricket Team | BCCI: ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பதற்கு மூன்று முதல் நான்கு ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடுவதை கட்டாயமாக்க என்று பி.சி.சி.ஐ ஆலோசித்து வருவதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தது. இதற்கு காரணம், இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் சில வீரர்கள் மார்ச் 22 ஆம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் ஐ.பி.எல் 2024 தொடருக்கான பயிற்சியில் இப்போதே இறங்கி விட்டார்கள்.
அதனால், காயம் அடைந்த மற்றும் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்திற்கான சிகிச்சை எடுத்தும் வரும் வீரர்களைத் தவிர, மற்ற இந்திய அணி வீரர்கள் ரஞ்சி கோப்பையில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) விரும்புகிறது.
குறிப்பாக, இந்திய வீரர்களில் ரஞ்சி கோப்பையில் தனது மாநில அணியான ஜார்கண்டிற்காக விளையாடுவதை விட விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷான் தனிப்பட்ட பயிற்சி அமர்வுகளில் ஈடுபட்டுள்ளார். இதேபோல், க்ருனால் பாண்டியா மற்றும் தீபக் சாஹர் போன்ற வீரர்களும் சிவப்பு பந்து (ரெட்-பால்) போட்டிகளில் விளையாட வேண்டும் என பி.சி.சி.ஐ விரும்புவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜார்கண்டிற்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான இஷான் கிஷன் இன்று வெள்ளிக்கிழமை முதல் தொடங்கிய இறுதிச் சுற்று ரஞ்சி கோப்பை ஆட்டங்களைத் தவிர்த்துள்ளார்.
இதேபோல், தீபக் சாஹர் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் ரஞ்சி கோப்பை ஆட்டத்திற்கு இல்லை. ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக ஓய்வில் உள்ளார். ஆனால், இஷான் கிஷன் மற்றும் தீபக் சாஹர் ரஞ்சி கோப்பை ஆட்டங்களை புறக்கணித்து இருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இஷான் கிஷன் இல்லாத நிலையில், குமார் குஷாக்ரா ஜார்கண்ட் அணிக்காக விக்கெட் கீப்பிங் பணிகளை செய்து வருகிறார். இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி மற்றும் பத்து புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ள ஜார்கண்ட், சொந்த மண்ணில் ராஜஸ்தானுடன் விளையாடுகிறது.
இந்தியாவின் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது இடைவேளையில் ஓய்வு கேட்ட இஷான் கிஷன், தனது புதிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுடன் பரோடாவில் பயிற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில், பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷாவிடம், இந்திய அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள் உள்நாட்டுப் போட்டிகளைத் தவறவிடுவது குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர், ஒப்பந்தம் செய்யப்பட்ட அனைத்து வீரர்களும் உள்நாட்டு கிரிக்கெட்டில் தேர்வு செய்யப்படுவதற்கு தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற உத்தரவை அனுப்புவதாக தெரிவித்தார்.
"நீங்கள் உடற்தகுதியுடன் இருந்தால், எந்த காரணமும் சொல்லப்படாது. இது அனைத்து இந்திய அணி ஒப்பந்த வீரர்களுக்கும் பொருந்தும், அவர்கள் விளையாட வேண்டும். வீரர் தனது எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது, தேர்வாளர்கள் அதை முடிவு செய்ய வேண்டும். வீரர் சிவப்பு-பந்து விளையாட்டில் சிறப்பாக இருந்தால் தான் அவர் விளையாட வேண்டும்." என்று ஜெய் ஷா கூறியிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.