Advertisment

துலீப் டிராபியில் மிரட்டல் அடி... கம்பேக்கை அறிவித்த இஷான் கிஷன்!

பிப்ரவரி 2024 இல், இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் உள்நாட்டு ரெட்-பால் போட்டிகளைத் தவிர்த்துவிட்டதாகக் கருதப்பட்டதால், பி.சி.சி.ஐ-யின் மத்திய ஒப்பந்தங்களில் இருந்து நீக்கப்பட்டனர்.

author-image
WebDesk
New Update
Ishan Kishan makes First Class comeback with Duleep Trophy hundred for India C vs India B Tamil News

இஷான் கிஷன் ஐ.பி.எல் 2024 சீசனுக்காக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்தார். அவர் 14 ஆட்டங்களில் ஒரு அரை சதத்துடன் 320 ரன்கள் எடுத்தார்.

துலீப் டிராபி 2024 போட்டிகள் அனந்தபூரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா ஏ,பி,சி,டி அணிகள் களமாடி வருகின்றன. இந்நிலையில், அனந்தபூரில் நடந்து வரும் 4-வது போட்டியில் அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணிகள் விளையாடி வருகின்றன.

Advertisment

இந்த ஆட்டத்தில் விளையாடி வரும் இந்திய சி அணி 77 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 353 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய சி அணி தரப்பில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 126 பந்துகளில் 14 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 111 ரன்கள் குவித்து அசத்தினார். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Ishan Kishan makes First-Class comeback with Duleep Trophy hundred for India C vs India B

இந்தியா சி அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ருதுராஜ் கெய்க்வாட் போட்டியின் இரண்டாவது பந்தில் கணுக்கால் காயம் காரணமாக ஓய்வு பெற்றார். சாய் சுதர்சன் 43 ரன்கள் மற்றும் ரஜத் படிதார் 40 ரன்கள் எடுத்த நிலையில், நான்கு பந்துகளில் ஆட்டமிழந்ததால் இந்தியா சி சிக்கலில் சிக்கித் தவித்தது. அந்த அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்த தடுமாறிய நிலையில், நம்பர். 4 பேட்டராக களமாடிய அவர் பாபா இந்திரஜித்துடன் சிறப்பான ஜோடியை அமைத்தார். 

இஷான் கிஷன், தொடர்ந்து பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் விளாசி மிரட்டினார். அவர் மதிய உணவுக்குப் பிறகு 48 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். பிறகு அவர் 120 பந்துகளில் தனது 7-வது முதல் தர சதத்தை விளாசி அசத்தினார். இதன் மூலம் தனது கம்பேக்கை கிரிக்கெட் உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளார். 

முன்னதாக, 2022 டிசம்பரில் ரஞ்சி டிராபியில் ஜார்கண்ட் அணிக்காக விளையாடிய இஷான் கிஷானின் முதல் முதல் தர ஆட்டம் இதுவாகும். ராஞ்சியில் கேரளாவுக்கு எதிராக அவரது முந்தைய முதல் தர சதம் விளாசினார். பின்னர் 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியாவுக்கான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவர் லெவன் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

கடந்த மாதம், இஷான் கிஷன் புச்சி பாபு டிராபியில் ஜார்கண்ட் அணியுடன் களமிறங்க, மத்தியப் பிரதேசத்திற்கு எதிராக திருநெல்வேலியில் 107 பந்துகளில் 114 ரன்கள் எடுத்தார். 

பிப்ரவரி 2024 இல், இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் உள்நாட்டு ரெட்-பால் போட்டிகளைத் தவிர்த்துவிட்டதாகக் கருதப்பட்டதால், பி.சி.சி.ஐ-யின் மத்திய ஒப்பந்தங்களில் இருந்து நீக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, இஷான் கிஷன்  ஐ.பி.எல் 2024 சீசனுக்காக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்தார். அவர் 14 ஆட்டங்களில் ஒரு அரை சதத்துடன் 320 ரன்கள் எடுத்தார்.

"நான் ரன்களை அடித்தேன், பின்னர் நான் பெஞ்சில் அமர வைக்கப்பட்டேன். இந்த விஷயங்கள் அணி விளையாட்டில் நடக்கும். ஆனால் பயண சோர்வை அனுபவித்தேன். ஏதோ தவறு இருக்கிறது என்று அர்த்தம், எனக்கு உடல்நிலை சரியில்லை, அதனால் ஓய்வு எடுக்க முடிவு செய்தேன். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக, எனது குடும்பம் மற்றும் சில நெருங்கிய நபர்களைத் தவிர, யாரும் அதைப் புரிந்து கொள்ளவில்லை, ”என்று இஷான் கிஷன் தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் கூறினார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Indian Cricket Team Ishan Kishan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment