Ishant Sharma on MS Dhoni Tamil News: இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2007ம் ஆண்டில் அறிமுகமானவர் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா. ரெட்-பால் ஃபார்மெட்டில் (டெஸ்ட்) இந்தியாவின் வெற்றிகரமான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்து வரும் அவர் 105 ஆட்டங்களில் 32.4 சராசரியில் 311 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 80 ஒருநாள் போட்டிகளில் 115 விக்கெட்டுகளையும், 14 டி20 போட்டிகளில் 8 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில், களத்தில் கேப்டன் கூலாக வலம் வரும் முன்னாள் இந்தியா கேப்டன் எம்.எஸ் தோனி மிஸ்டர் கூல் இல்லை என்றும், அவர் அடிக்கடி அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார் என்றும் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளர்.
டி.ஆர்.எஸ் கிளிப்ஸ் யூடியூப் சேனலில் பேசிய இஷாந்த், “மஹி பாய்க்கு பல பலங்கள் உள்ளன. ஆனால் அமைதியும், கூலாக இருப்பதும் அவற்றில் ஒன்றல்ல. அவர் களத்தில் அடிக்கடி தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். அதை நான் நேரில் கேட்டிருக்கிறேன்.
ஐ.பி.எல் போட்டியாக இருந்தாலும் சரி, இந்திய அணியின் போட்டியாக இருந்தாலும் சரி, வீரர்கள் எப்போதும் அவரைச் சுற்றி இருப்பார்கள். மஹி பாயுடன் யாரேனும் ஒருவர் அமர்ந்திருப்பதை நீங்கள் காண்பீர்கள். இது நமது கிராமத்தில் மரங்களைச் சுற்றி அமர்ந்து இருப்பது போன்ற உணர்வு தான்.
"நான் பந்துவீசி முடித்த பிறகு, மஹி பாய் என்னிடம், 'நீங்கள் சோர்வாக இருக்கிறீர்களா?' என்று கேட்டார். நான், 'ஆம், நிறைய' என்று பதிலளித்தேன். பிறகு அவர், 'உனக்கு வயதாகிறது, வெளியேறி விடு' என்றார்.
ஆனால், அவர் கோபப்படுவது வழக்கம் அல்ல. ஒரு டெஸ்ட் போட்டியின் போது நான் த்ரோவை சரியாக அடிக்காததால் அவர் ஆத்திரமடைந்தார்.
மஹி பாய் பந்தை எறிந்தபோது, அது கீழே போனதைத் தவிர, கோபமாக நான் பார்த்ததில்லை. அவர் முதல் முறை வீசியபோது, நான் அந்த தோற்றத்தைப் பார்த்தேன். இரண்டாவதாக அவர் வீசிய போது அது இன்னும் வலுவாக இருந்தது. மேலும் பந்து கீழே சென்றது.
மூன்றாவதாக வீசுகையில், ‘அதைக் கையில் கொடுங்கள்’ என்றார். அவர் அதை திட்டும் விதமாக சொன்னார், ”என்று அவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெ றhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.