Advertisment

ஐஎஸ்எல்: கடைசி நேரத்தில் வெற்றியை நழுவவிட்ட டெல்லி டயனமோஸ்!

துல்லியமாக பந்தை கடத்திச் சென்றதில்இரு அணிகளும் தலா 50 சதவிகிதம் சிறப்பாக செயல்பட்டன. ஆனால், டெல்லி இன்னும் கொஞ்சம் கவனமாக ஆடியிருந்தால் வெற்றிப் பெற்று இருக்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ISL: Delhi vs Pune

ISL: Delhi vs Pune

ஆசைத் தம்பி

Advertisment

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடந்து வருகிறது. அறிமுக ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், 2015-ம் ஆண்டில் சென்னையின் எஃப்சி அணியும், 2016-ம் ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், கடந்த ஆண்டில் (2017) சென்னையின் எஃப்சி அணியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. இந்த நிலையில் 5-வது ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கியது.

இதில் சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), எப்.சி.கோவா, மும்பை சிட்டி, ஜாம்ஷெட்பூர், அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், டெல்லி டைனமோஸ், புனே சிட்டி ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு டெல்லி மற்றும் புனே அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியதில் இருந்தே, புனே அணி வீரர்களின் கால்கள் களத்தில் ஆக்ரோஷமாக பாயத் தொடங்கின. இதனால், நான்காவது நிமிடத்திலேயே புனே அணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிட்டியது. ஆனால், அது ஜஸ்ட் மிஸ் ஆக சுதாரித்துக் கொண்ட டெல்லி அணி, மேலும் ஆட்டத்தின் வேகத்தை கூட்டியது.

16வது நிமிடத்தில் டெல்லி அணியின் நாராயண் தாஸ் கோல் போஸ்ட்டை நோக்கி அடித்த பந்து, புனே கோல்கீப்பரால் தடுக்கப்பட்டது. இதையடுத்து 24வது நிமிடத்தில் கிடைத்த கார்னர் வாய்ப்பை வேஸ்ட் செய்தது புனே அணி.

ஆனால், 44வது நிமிடத்தில் டெல்லி அணியின் கராமி அற்புதமாக கோல் அடிக்க டெல்லி 1-0 என முன்னிலை பெற்றது. மார்கோஸ் பாஸ் செய்த பந்தை அவர் சிறப்பாக கோலாக்கினார். இதனால், முதல் பாதியில் 1-0 என டெல்லி முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில், இரு அணிகளும் கோல் போட முயற்சித்தாலும், ஒருக்கட்டத்தில் டெல்லி டிபன்ஸ் எடுத்தது ஆடியது. புனே வீரர்களை கோல் போஸ்ட்டை நோக்கி முன்னேற விடாமல் தடுப்பதிலும், கோல் போஸ்ட்டை சுற்றி வளைப்பதிலும் கவனம் செலுத்தினர்.

ஆனால், அதையும் மீறி, ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தியது புனே அணி. புனேவின் எமிலியானோ அல்ஃபாரோ பந்தை, எளிதாக கோலாக்கினார் டியாகோ கார்லஸ். மேற்கொண்டு இரு அணிகளும் கோல் அடிக்காததால், ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது.

பால் பொசஷன்

டெல்லி – 50 % புனே – 50%

துல்லியமாக பந்தை கடத்திச் சென்றதில்இரு அணிகளும் தலா 50 சதவிகிதம் சிறப்பாக செயல்பட்டன. ஆனால், டெல்லி இன்னும் கொஞ்சம் கவனமாக ஆடியிருந்தால் வெற்றிப் பெற்று இருக்கலாம்.

டார்கெட்டை நோக்கி டெல்லி அடித்த ஷாட்களின் எண்ணிக்கை 3

டார்கெட்டை நோக்கி புனே அடித்த ஷாட்களின் எண்ணிக்கை 2.

இரு அணிகளும், தங்கள் மொத்த டார்கெட் ஷாட்களில் ஒன்றை மட்டுமே கோலாக மாற்றின.

டார்கெட்டுக்கு வெளியே டெல்லி அடித்த ஷாட்களின் எண்ணிக்கை 4. புனே அடித்த ஷாட்களின் எண்ணிக்கை 3.

டெல்லி அணி தங்களுக்குள் 396 முறை பந்தை பாஸ் செய்து கொண்டது. அதுவே புனே 372 முறை பாஸ் செய்தது.

அதேபோல், டெல்லி அணி 552 முறை பந்தை தொட்டது. புனே அணி 548 முறை பந்தை தொட்டது. அதாவது, பந்தை பாஸ் செய்ததையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக பந்தை அந்தந்த அணிகள் தொட்ட கணக்கு இது.

டெல்லி அணி 11 முறையும், புனே அணி 5 முறையும் ஃபவுல் ஷாட்ஸ் அடித்தன.

கார்னர் ஷாட்டை டெல்லி 4 முறையும், புனே 6 முறையும் அடித்துள்ளன.

டெல்லி அணி 1 மஞ்சள் அட்டை பெற்றது. புனே டீசண்ட்டாக ஆடியதால் மஞ்சள் கார்டு கொடுக்கப்படவில்லை. ரெட் கார்டு இரு அணிகளும் பெறவில்லை.

ஒட்டுமொத்தமாக, நேற்றைய ஆட்டத்தில் டெல்லிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. அதை அந்த அணி கடைசி நேரத்தில் கோட்டை விட்டது என்றே சொல்ல வேண்டும்.

Football
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment