New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/tamil-indian-express-2023-06-30T172359.046.jpg)
23 வயதான சுவீடன் பெர்னாண்டஸ் கோவாவில் பிறந்தவர்.
23 வயதான சுவீடன் பெர்னாண்டஸ் கோவாவில் பிறந்தவர்.
Chennaiyin FC's signing of Sweden Fernandes Tamil News: இந்த ஆண்டுக்கான இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்க தயாராகி வரும் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணியில் இளம் நடுகள வீரர் சுவீடன் பெர்னாண்டஸ் ஒப்பந்தமாகியுள்ளார்.
கோவாவில் பிறந்தவரான அவர் ஐ-லீக் கால்பந்தில் நெரோகா எப்.சி.க்காக விளையாடினார். பின்னர் ஐதராபாத் எப்.சி.க்கு வாங்கப்பட்டார். அங்கிருந்து இந்த சீசனில் சென்னையின் எப்.சி.யில் கால்பதிக்கிறார். அவரது வருகையை அடுத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
23 வயதான சுவீடன் பெர்னாண்டஸ் கூறுகையில், 'சென்னை அணியில் இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனது திறமையை நிரூபித்து காட்ட வாய்ப்பு அளித்த கிளப் நிர்வாகத்துக்கு நன்றி. சென்னை ரசிகர்கள் முன் களம் இறங்க ஆர்வமுடன் இருக்கிறேன்' என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.