/tamil-ie/media/media_files/uploads/2021/03/TAMILNADU-COVID-4.jpg)
ISSF World Cup tamil news: சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பு (ஐ.எஸ்.எஸ்.எஃப்) நடத்தும் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டிகள் டெல்லியில் உள்ள கர்னி சிங் ஷூட்டிங் ரேஞ்சில் இன்று முதல் நடைபெற்று வருகிறது. மிக பரப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டிகளில் இந்திய அணியினர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணி போட்டியில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் மற்றும் திவ்யான்ஷ் பன்வார் தங்கப்பதக்கம் வென்றனர். அதோடு மிகச் சிறப்பாக குறி பார்த்துச் சுட்ட இந்த வீராங்கனைகள் மொத்தம் 16 தங்கப்பதக்கங்களை வென்று குவித்தனர்.
இன்று முதல் நடைபெற்று வரும் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் தொடக்கம் முதலே விறுவிறுப்பு தொற்றிக் கொண்டது. 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் கலப்பு அணியாக களம் கண்ட இந்தியாவின் இளவேனில் வாலறிவன் மற்றும் திவ்யான்ஷ் பன்வார், இறுதிச்சுற்றில் தலா 10.4 புள்ளிகள் பெற்று, ஹங்கேரியின் இஸ்த்வான் பெனி மற்றும் எஸ்டர் டெனெஸ் ஜோடியை பின்னுக்கு தள்ளினர்.
ஏற்கனவே ஜூனியர் பிரிவுகளில் பல உலக சாதனை படைத்த இளவேனில் வாலறிவன், தற்போது இந்த போட்டிகளில் தங்கம் வென்றதன் மூலம் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் தரவரிசைப் பட்டியலில் தனது முதலிடத்தை மீண்டும் தக்க வைத்துள்ளார்.
"நாங்கள் இந்த போட்டிகளில் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இறுதியில், திவ்யான்ஷும் நானும் தங்கத்தை வெல்வதை மிகச் சிறப்பாக நிர்வகித்துள்ளோம், ”என்று இளவேனில் வாலறிவன் போட்டிக்கு பின்னர் நடந்த நிகழ்வில் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் 'நம்பர் ஒன்' ஜோடியாக உள்ள ஹங்கேரியின் இஸ்த்வான் பெனி மற்றும் எஸ்டர் டெனெஸ் ஜோடி 10 பதக்கங்களை வென்றுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.