அன்று தோனி அணியிடம் இழந்த கௌரவத்தை இன்று மீட்ட இலங்கை - இதுதான் வீரனுக்கு அழகு! (வீடியோ)

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Isuru Udana opts not to run out injured batsman in MSL video - அன்று இந்தியாவிடம் இழந்த கௌரவத்தை இன்று மீட்ட இலங்கை - இதுதான் ஒரு கிரிக்கெட் வீரனுக்கு அழகு! (வீடியோ)

Isuru Udana opts not to run out injured batsman in MSL video - அன்று இந்தியாவிடம் இழந்த கௌரவத்தை இன்று மீட்ட இலங்கை - இதுதான் ஒரு கிரிக்கெட் வீரனுக்கு அழகு! (வீடியோ)

தென்னாப்பிரிக்காவில் Mzansi சூப்பர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், போலண்ட் பார்க்கில் நெல்சன் மண்டேலா பே ஜெயன்ட்ஸ் அணியும், பார்ல் ராக்ஸ் அணியும் மோதின.

Advertisment

டு பிளசிஸ் தலைமையிலான பார்ல் ராக்ஸ் அணி நிர்ணயித்த 169 ரன்கள் இலக்கை துரத்தி, நெல்சன் மண்டேலா பே ஜெயன்ட்ஸ் அணி ஆடி வந்தது.

8, 2019
Advertisment
Advertisements

அப்போது,  19வது ஓவரை இலங்கை வீரர் இசுரு உதான வீசினார். தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் ஹெய்னோ குன் மற்றும் மார்கோ மரைஸ் ஆடிக் கொண்டிருந்தனர்.

எட்டு பந்துகளுக்கு 24 ரன்கள் அடிக்க வேண்டும் என இக்கட்டான சூழலில், இசுரு உதான வீசிய பந்தில் குன் அடித்த ஷாட், எதிர் முனையில் ரன் ஓட காத்திருந்த மரைஸின் கையை பலமாக தாக்கியது.

இதனால், வலி தாங்க முடியாமல் கிரீசுக்கு வெளியே மரைஸ் சுருண்டு விழ, அவரை ரன் அவுட்டாக்க உதானாவுக்கு அருமையான வாய்ப்பு கிடைத்தது.

ஆனால், அவர் மனிதாபிமானம் கருதி, அவரை ரன் அவுட் செய்யவில்லை. இதன்பிறகே, மரைஸ் கிரீசுக்குள் வந்தார்.

இசுரு உதானாவின் இச்செயலை சமூக தளங்களில் ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

முன்னதாக, கடந்த 2010ம் ஆண்டு, இலங்கையின் தம்புலாவில் நடந்த ஒருநாள் போட்டி ஒன்றில், இலங்கை நிர்ணயித்த 170 ரன்கள் இலக்கை, ஒற்றை ஆளாக துரத்திக் கொண்டிருந்தார் விரேந்திர சேவாக். அப்போது, 35வது ஓவரை இலங்கை ஸ்பின்னர் சுராஜ் ரன்தீவ் வீசினார்.  இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் ஒரு ரன்னே தேவைப்பட, சேவாக்கின் ஸ்கோர் 99. ஒரு ரன் எடுத்தால் வெற்றி + சதம் என்ற களிப்பில் சேவாக் பேட்டிங் செய்ய, சுராஜ் ரன்தீவ் வீசிய பந்தை அவர் சிக்ஸருக்கு விளாசினார். ஆனால், அது நோ பால் என்று அம்பயர் அறிவிக்க, அவரது சிக்ஸர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதற்குள்ளாகவே ஒரு ரன் எடுத்து இந்தியா வென்றதாக அறிவிக்கப்பட்டது.

வேண்டுமென்றே ரன்தீவ் அப்படி பந்து வீசியது அப்பட்டமாகவே தெரிந்தது. சேவாக்கே, போட்டி முடிந்த பிறகு, இதுகுறித்து விமர்சித்து பேசி இருந்தார்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: