ஆசிய கோப்பை, உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் வரிசை தொடர்பான கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.
இதற்கிடையில் முன்னாள் வீரர்கள் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் இவர்கள் விராத் கோலியை 4வது வீரராக இறக்க வேண்டும் என்றும் கூறிவருகின்றனர். அதிலும், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு எதிரான போட்டியின்போது ஒருவேளை முதல் வரிசை ஆட்டம் இழந்துவிட்டால் 4வது வீரராக விராத் கோலியை இறக்க வேண்டும் என்ற கருத்தும் எழுந்துவருகிறது.
இந்த நிலையில் அணியின் பேட்டிங் வரிசை இப்படித்தான் இருக்கும் என்பதை ராகுல் டிராவிட் சூசகமாக தெரிவித்துள்ளார்.
அதன்படி ஆசிய கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதில், ஸ்ரேயாஸ் ஐயர் நான்காவது வீரராகவும், கே எல் ராகுல் ஐந்தாவது வீரராகவும் களத்திற்கு வந்து பேட்டிங் செய்தார்கள்.
மேலும் ஆறாவது வீரராக சூரியகுமார் யாதவும் ஏழாவது வீரராக ஹர்திக் பாண்டியாவும், எட்டாவது வீரராக ஜடேஜாவும் பேட்டிங் பயிற்சி செய்தார்கள்.
இதில், விராட் கோலி மூன்றாவது வீரராக தான் களமிறங்கினார். ரோகித் சர்மாவும், கில்லும் முதலாவது ஆட்டக்காரராக இறங்கினார்கள். இதன்மூலம் ராகுல் டிராவிட் சொல்லாமல் சொல்லிட்டார் என்கின்றனர் கிரிக்கெட் நிபுணர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“