Advertisment

உள்ளாடை இல்லாமால் ஓடிய வீரர்… உண்மையில் நடந்து என்ன?

Italian Decathlete Suffers Wardrobe Malfunction That Prevents Him From Winning Race Tamil News: கொலம்பியாவில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் 400 மீட்டர் டெகாத்லான் போட்டியில், இத்தாலிய வீரருக்கு நடந்த அசௌகரிய சம்பவ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
Aug 10, 2022 18:06 IST
Italian Athlete Loses Race After His Penis Came Out in The Middle of The Run Tamil News

video of Italian racer at the 2022 World Athletics U20 Championships in Colombia is going viral on social media Tamil News

2022 World Athletics U20 Championships TAMIL NEWS: 20 வயதுக்குட்பவர்களுக்கான 19வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் நடந்தது. ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கிய இப்போட்டிகள் கொலம்பியாவின் சாண்டியாகோ டி கலியில் உள்ள பாஸ்குவல் குரேரோ ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் அரங்கேறியது. இதில் பதக்கங்களை அள்ளிக் குவித்த அமெரிக்க - ஜமைக்கா நாடுகளில் 7 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம் பிடித்தது. 6 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம் என 16 பதக்கங்களுடன் ஜமைக்கா 2ம் இடம் பிடித்தது.

Advertisment

இந்த ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், போட்டியின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணைய மற்றும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வைரல் வீடியோவில் உள்ளாடை அணியாமல் களமாடிய வீரர் ஒருவருக்கு என்ன நடந்தது என்று தெரிய வந்துள்ளது.

இத்தாலியைச் சேர்ந்த 18 வயதான ஆல்பர்டோ நோனினோ, காலியில் நடந்த 400 மீட்டர் டெகாத்லான் போட்டியில் பங்கேற்றார். அவர் தனது போட்டியாளர்களுக்கு எதிராக வேகத்தை அதிகரிப்பதன் மூலம் ஓட்டத்தை மிகவும் சிறப்பாக தொடங்கினார். இதனால், அவர் பந்தயத்தை மிகவும் எளிதாக வெல்வார் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்தனர்.

இருப்பினும், நோனினோ நடுப் பாதையைக் கடந்த பிறகு, அவர் அசௌகரியமாகத் தோன்றினார். மேலும் இரண்டு முறை தனது கால்களுக்கு இடையே உள்ள பகுதியை பிடிக்க கீழே கையை நீட்டினார். அந்த நேரத்தில், பார்வையாளர்களுக்கு என்ன தவறு நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் நோனினோவின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. அதனால், அவரது போட்டியாளர்கள் அவரை முந்திச் சென்றனர். அவர் துரதிர்ஷ்டவசமாக, பந்தயத்தை 51.57 வினாடிகளில் முடித்து கடைசி இடத்தைப் பிடித்தார்.

publive-image

இது தொடர்பாக பேசியுள்ள விளையாட்டு பத்திரிகையாளர் டேவிட் சான்செஸ் டி காஸ்ட்ரோ, ஆல்பர்டோ நோனினோவின் ஆணுறுப்பு ஷார்ட்ஸிலிருந்து வெளியே வந்தது. இதனால், பந்தயத்தின் போது அவரால் சரியாக ஓட முடியவில்லை. அவர் அந்த சிக்கலைச் சமாளிக்க முயன்றார். ஆனால் அந்த நேரத்தில் அவருக்கு ஆதரவாக எதுவும் செயல்படவில்லை என்று கூறியுள்ளார்.

டேவிட் சான்செஸ் டி காஸ்ட்ரோ பதிவிட்டுள்ள அந்த வீடியோவில், ஆல்பர்டோ நோனினோ ஓட்டப்பந்தயம் தொடங்கியதும் அனைத்து வீரர்களும் ஓடுகிறார். அனைவரும் முழு வீச்சில் வெற்றியடையும் முனைப்பில் உள்ளனர். ஆனால் சிறிது நேரத்தில் வீரர் ஒருவர் மெதுவாக ஒடினார். அவரது கை அவரது ஆணுறுப்பு பகுதிக்கு செல்கிறது. ஆணுறுப்பு பகுதியில் கை வைத்து மறைக்கிறார். ஓடும் வேகத்தை விட ஆணுறுப்பு பாகத்தில் அதிக கவனம் செலுத்துகிறார். ஏனென்றால் அவர் ஷார்ட்ஸ் அணிந்திருந்தார். ஆனால் உள்ளே உள்ளாடை அணியவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

#Sports
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment