Jadeja hand over CSK captaincy again to MS Dhoni: தொடர் தோல்விகள் காரணமாகவும், தனது ஆட்டத்தில் கவனம் செலுத்தும் வகையிலும் தனது கேப்டன் பதவியை மீண்டும் தோனியிடம் ஒப்படைத்துள்ளார் ஜடேஜா.
ஐபிஎல் போட்டிகள் என்றாலே முன்னனியில் இருக்கும் அணி சென்னை சூப்பர் கிங்ஸ். ஐபிஎல் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து மற்ற அணிகளில் பலமுறை கேப்டன்கள் மாற்றப்பட்ட நிலையில், இந்த ஐபிஎல்லுக்கு முன் வரை கேப்டனை மாற்றாத ஒரே அணி சிஎஸ்கே. சென்னை அணிக்கு மட்டுமல்லாது ஐபிஎல் போட்டிகளிலே வெற்றிகரமான கேப்டனாக இருந்து வந்தார் தோனி.
இந்த ஐபிஎல் போட்டி ஆரம்பிக்கும் முன்னர், தோனி தனது கேப்டன் பதவியை ஜடேஜாவிடம் கொடுத்தார். இது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது.
சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக 4 போட்டிகளை சந்தித்த பின்னர் தான் முதல் வெற்றியை பதிவு செய்தது. தற்போது வரை 8 ஆட்டங்களில் ஆடிய உள்ள சென்னை அணி 2 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் 9 ஆம் இடத்தில் உள்ளது. சென்னை அணி வெற்றி பெற்ற இரு அணிகளைப் பொறுத்தவரை, தொடர்ச்சியாக 8 தோல்விகளைச் சந்தித்துள்ள மும்பை அணி ஒன்று, மற்றொன்று பெங்களூரு அணி.
இதையும் படியுங்கள்: உள்ளூரில் துரத்தப்பட்ட புஜாரா; இங்கிலாந்தில் ஹாட்ரிக் சதம்!
அதேநேரம், ஜடேஜாவின் ஆட்டம் இந்த ஐபிஎல்லில் சுத்தமாக எடுபடவில்லை. கேப்டன் பணிச்சுமையால் தான் ஜடேஜாவால் தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்த முடியவில்லை என பல்வேறு தரப்பினரும் கூறிவந்தனர்.
இந்தநிலையில், தனது கேப்டன் பதவியை மீண்டும் தோனியிடமே ஒப்படைத்தார் ஜடேஜா. இது குறித்து சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சிஎஸ்கே கேப்டன் பதவியை ஜடேஜா மீண்டும் எம்எஸ் தோனியிடம் ஒப்படைத்துள்ளார். ரவீந்திர ஜடேஜா தனது ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தவும், சிஎஸ்கேயை வழிநடத்தவும் எம்எஸ் தோனியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜடேஜா தனது விளையாட்டில் கவனம் செலுத்த அனுமதிக்கும் வகையில் CSK-ஐ வழிநடத்த எம்எஸ் தோனி ஒப்புக்கொண்டுள்ளார் என சிஎஸ்கே அணி தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil