சிஎஸ்கே கேப்டன் பதவியை தோனியிடம் ஒப்படைத்த ஜடேஜா; வைரல் மீம்ஸ், Jadeja handed over CSK captaincy to Dhoni, viral Twitter memes | Indian Express Tamil

சிஎஸ்கே கேப்டன் பதவியை தோனியிடம் ஒப்படைத்த ஜடேஜா; வைரல் மீம்ஸ்

தொடர் தோல்விகள் காரணமாக சிஎஸ்கே கேப்டன் பதவியை மீண்டும் தோனியிடமே ஒப்படைத்த ஜடேஜா; மீம்ஸ்களால் திணறிய ட்விட்டர்

சிஎஸ்கே கேப்டன் பதவியை தோனியிடம் ஒப்படைத்த ஜடேஜா; வைரல் மீம்ஸ்

Jadeja handed over CSK captaincy to Dhoni, viral Twitter memes: நடப்பு ஐபில் சீசன் தொடங்குவதற்கு முன்னதாக, எம்எஸ் தோனி சிஎஸ்கேயின் கேப்டன் பதவியை ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தபோது கிரிக்கெட் அதிர்ந்தது. கடந்த சனிக்கிழமையன்று, ஜடேஜா தனது விளையாட்டில் கவனம் செலுத்துவதற்காக தோனியிடம் மீண்டும் சிஎஸ்கே கேப்டன் பதவியை ஒப்படைப்பதாக சிஎஸ்கே நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது, ரசிகர்களுக்கு மற்றொரு அதிர்ச்சியாக இருந்தது.  

“ரவீந்திர ஜடேஜா தனது ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்த கேப்டன் பதவியை துறக்க முடிவு செய்துள்ளார், மேலும் MS தோனியை CSK க்கு தலைமை தாங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஜடேஜா தனது விளையாட்டில் கவனம் செலுத்த அனுமதிக்கும் வகையில், MS தோனி CSK ஐ வழிநடத்த ஒப்புக்கொண்டார்”. என சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்திருந்தது.

நடப்பு ஐபிஎல் சாம்பியனாக இருக்கும் சிஎஸ்கே, நடப்பு சீசனில், இதுவரை விளையாடிய எட்டு ஆட்டங்களில் ஆறில் தோல்வியடைந்த நிலையில் கேப்டன் பொறுப்பு மீண்டும் தோனியிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை எதிர்கொண்ட சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது.

நேற்றைய ஆட்டத்திற்கு முன்னர், CSK இந்த சீசனில் இதுவரை இரண்டு முறை மட்டுமே வென்றுள்ளது, ஐபிஎல் 2022 இன் தொடக்கத்தில் நான்கு தொடர்ச்சியான தோல்விகளுக்குப் பிறகு அவர்களின் முதல் வெற்றி கிடைத்தது. அவர்களின் இரண்டாவது வெற்றி மும்பை இந்தியன்ஸுக்கு எதிரானது, ஆனால் பஞ்சாப் கிங்ஸிடம் அடுத்த போட்டியில் தோல்வியடைந்து மீண்டும் தோல்வியைச் சந்தித்தது.

முன்னதாக, CSK கேப்டன் மாற்ற அறிவிப்பைத் தொடர்ந்து, ட்விட்டரில் ஏராளமான மீம்ஸ்கள் வலம் வந்தன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Jadeja handed over csk captaincy to dhoni viral twitter memes