/indian-express-tamil/media/media_files/2T0dLCZW8X86GcgrNmrF.jpg)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை மறுநாள் வியாழக்கிழமை (வருகிற 15ம் தேதி) முதல் நடைபெற உள்ளது.
India vs England 3rd Test, Rajkot: பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், விசாகப்பட்டினத்தில் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை மறுநாள் வியாழக்கிழமை (வருகிற 15ம் தேதி) முதல் நடைபெற உள்ளது.
பாரத்துக்குப் பதில் துருவ் ஜூரல்?
இந்த நிலையில், ராஜ்கோட்டில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் விக்கெட் கீப்பர்- பேட்ஸ்மேன் துருவ் ஜூரல் தனது டெஸ்ட் அறிமுகம் காணலாம் என்றும், கே.எஸ்.பாரத்துக்குப் பதிலாக அவர் விளையாட வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பி.சி.சி.ஐ நிர்வாகி ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், "இந்திய கிரிக்கெட்டில் முக்கிய முடிவெடுப்பவர்கள் விக்கெட் கீப்பர் பாரத் விஷயத்தில் பொறுமையை இழந்திருக்கலாம். அவர் இதுவரை விளையாடிய 7 டெஸ்ட் போட்டிகளில் குறிப்பிடத்தக்க எதையும் செய்யவில்லை.
பாரத்தின் பேட்டிங் பெரிய அளவில் இல்லை. அதே சமயம் அவரது கீப்பிங்கும் சிறப்பாக இல்லை. அவர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தவில்லை. மறுபுறம், ஜூரல் திறமையானவர், நல்ல அணுகுமுறை மற்றும் பிரகாசமான எதிர்காலம் கொண்டவர். ஐ.பி.எல்-லில் உத்தரப் பிரதேசம், இந்தியா ஏ மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காக அவர் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். ஜூரல் ராஜ்கோட்டில் டெஸ்ட் அரங்கில் அறிமுகமானால் ஆச்சரியப்படுவதற்கில்லை." என்று அந்த நிர்வாகி கூறினார்.
பி.சி.சி.ஐ நிர்வாகி கூறுவது போல பாரத்க்கு டெஸ்ட் போட்டியில் மீண்டும் மீண்டும் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் அந்த பொன்னான வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தவில்லை. இந்த தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 23.00 என்கிற சராசரியில் 92 ரன்கள் தான் எடுத்துள்ளார். ஒட்டுமொத்தமாக, 7 டெஸ்டில் 20.09 சராசரியை 221 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இந்தத் தொடருக்கு முன், பாரத் கடைசியாக இந்தியாவுக்காக ஜூன் 2023 இல் லண்டனில் உள்ள ஓவலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் (அவர் 5 & 23 ரன்களுக்கு அவுட் ஆனார்) விளையாடினார்.
மறுபுறம், 15 முதல் தர போட்டிகளில் இருந்து ஜூரல் 46.47 சராசரியில் ஒரு சதம் மற்றும் 5 அரைசதங்களுடன் 790 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக அவர் 249 ரன்கள் எடுத்துள்ளார். 22 வயதான அவர் கடந்த மாதம் அகமதாபாத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 50 ரன்களும், டிசம்பரில் பெனோனியில் ஆப்பிரிக்கா ஏ-இரண்டு நான்கு நாள் போட்டியில் சவுத் அணிக்கு எதிராக 69 ரன்களும் எடுத்தார்.
ராஞ்சியில் பும்ராவுக்கு ஓய்வு
"அவரது பணிச்சுமை மற்றும் அவரின் மதிப்பைக் கருத்தில் கொண்டு, இந்த ஐந்து டெஸ்ட் தொடரில் ஒரு கட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு இடைவெளி கொடுக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எனவே, ராஞ்சியில் நடக்கும் நான்காவது டெஸ்டில் அவருக்கு ஓய்வளிக்கப்படலாம். அதாவது மார்ச் மாத தொடக்கத்தில் தரம்ஷாலாவில் நடக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு அவர் புத்துணர்ச்சியுடன் இருப்பார். இது நெருக்கமாகப் போட்டியிடும் இந்தத் தொடரை தீர்மானிக்கும் போட்டியாகக் கூட இருக்கலாம். பும்ரா அணியில் இருப்பதால் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறார்" என்று பி.சி.சி.ஐ நிர்வாகி கூறியுள்ளார்.
அவேஷ்க்கு 'கேம் டைம்' தேவை
முதல் இரண்டு டெஸ்டில் லெவன் அணியில் விளையாட வாய்ப்பளிக்காமல், கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கானை நீக்கியதன் காரணமாக தேர்வாளர்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளனர். "அவருக்கு ஆட்ட நேரம் கொடுக்க வேண்டும் என்பதுதான் யோசனை, அதனால்தான் ரஞ்சி டிராபியில் மத்திய பிரதேசத்திற்காக சென்று விளையாடும்படி கேட்கப்பட்டுள்ளார்.
அவர் பிப்ரவரியில் இதுவரை விளையாடவில்லை. அவரது மாற்றாக, இந்தியா ஏ அணிக்காக சிறப்பாக செயல்பட்ட ஆகாஷ் தீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதுவாக இருந்தாலும், ராஜ்கோட்டில் இந்தியாவுக்கான இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் தான் " என்று அவர் கூறினார்.
பி.சி.சி.ஐ கவலை
சிவப்பு பந்து கிரிக்கெட், குறிப்பாக ரஞ்சி டிராபி போன்ற பெரிய போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியில் ஆடும் வீரர்கள் பங்கேற்காமல் புறக்கணித்து வருவது குறித்து பி.சி.சி.ஐ கவலை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியது. "அடுத்த சில நாட்களில், அனைத்து வீரர்களும் ரஞ்சி டிராபியில் தங்கள் மாநில அணிக்காக விளையாட பி.சி.சி.ஐ மூலம் தெரிவிக்கப்படும். அவர்கள் தேசிய அணியில் இடம் பெறாத பட்சத்தில் அவர்கள் ரஞ்சி டிராபியில் கண்டிப்பாக விளையாட வேண்டும். காயம் மற்றும் காயத்தில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மட்டுமே விடுப்பு வழங்கப்படும். ஜனவரி முதல் ஐ.பி.எல் செட்-அப்க்கு தயாராகி வரும் சில வீரர்கள் குறித்து கிரிக்கெட் வாரியம் கவலையை வெளிப்படுத்தியுள்ளது." என்று அந்த பி.சி.சி.ஐ நிர்வாகி கூறினார்.
ராஜ்கோட்டில் ஸ்லோ டர்னர்
இதற்கிடையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி நடக்கும் ராஜ்கோட்டில் மெதுவான ஆடுகளம் (ஸ்லோ டர்னர்) வழங்கப்பட வாய்ப்புள்ளது. "இந்திய அணி நிர்வாகம் ஸ்லோ டர்னரை விரும்புகிறது. அவர்கள் பவுன்ஸ் அதிகம் வரும் ஆடுகளத்தை விரும்பவில்லை" என்று அவர் கூறினார்.
ஜடேஜா, புஜாராவுக்கு கவுரவம்
சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் நாளை (பிப்ரவரி 14) ராஜ்கோட்டில் இந்திய கிரிக்கெட்டுக்கான பங்களிப்பிற்காக ரவீந்திர ஜடேஜா மற்றும் சேட்டேஷ்வர் புஜாரா ஆகியோரை பாராட்டி கவுரவிக்க உள்ளது. இந்த விழாவில் ராஜ்கோட் மைதானத்திற்கு சங்கத்தின் மூத்த நிர்வாகியான நிரஞ்சன் ஷா பெயர் சூட்டப்படவுள்ளது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.