Advertisment

பெங்கால் வாரியர்ஸை பந்தாடிய ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ்; தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்திய ஹரியானா ஸ்டீலர்ஸ்

17 புள்ளிகள் வித்தியாசத்தில் பெங்கால் வாரியர்ஸை வீழ்த்திய ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ்; 7 புள்ளிகள் வித்தியாசத்தில் தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி ஹரியானா ஸ்டீலர்ஸ் வெற்றி

author-image
WebDesk
New Update
Jaipur Pink Panthers vs Bengal Warriors and Telugu Titans vs Haryana Steelers PKL Season 10 match updates in Tamil

புரோ கபடி லீக் 2023 -24: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - பெங்கால் வாரியர்ஸ்; தெலுங்கு டைட்டன்ஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Pro Kabaddi League Season: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.

Advertisment

இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.  அதில் ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கத்தில் இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோத உள்ளன. இதையடுத்து இரவு 9 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோத உள்ளன.

பெங்கால் வாரியர்ஸை பந்தாடிய ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ்

இன்றைய முதல் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளைப் பெற்று முன்னிலை பெற்று வந்தன. இரண்டாம் பாதியில் ஜெய்ப்பூர் வீரர்கள் தங்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனை சமாளிக்க முடியாமல் பெங்கால் வீரர்கள் திணறினர்.

முடிவில் ஜெய்ப்பூர் அணி 42 புள்ளிகளையும், பெங்கால் அணி 25 புள்ளிகளையும் பெற்றது. இதன் மூலம் ஜெய்ப்பூர் அணி 17 புள்ளிகள் வித்தியாசத்தில் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஜெய்ப்பூர் அணியில் அதிகபட்சமாக அர்ஜூன் தேஸ்வால் 15 புள்ளிகளையும், பவானி ராஜ்புத் 7 புள்ளிகளையும் எடுத்தனர். பெங்கால் அணியில் அதிகபட்சமாக மணீந்தர் 9 புள்ளிகளையும் வைபவ் 5 புள்ளிகளையும் எடுத்தனர்.

தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்திய ஹரியானா ஸ்டீலர்ஸ்

இன்றைய இரண்டாவது போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஹரியானா அணி ஆதிக்கம் செலுத்தியது. தெலுங்கு டைட்டன்ஸ் கடுமையாக போராடினாலும் முன்னிலைப் பெற முடியவில்லை. முடிவில் ஹரியானா அணி 7 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ஹரியானா அணி 37 புள்ளிகளையும், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 30 புள்ளிகளையும் எடுத்தன. ஹரியானா அணியில் அதிகபட்சமாக ராகுல் 8 புள்ளிகளையும், வினய், மோகித், சிவம் தலா 6 புள்ளிகளையும் பெற்றனர். தெலுங்கு டைட்டன்ஸ் அணியில் அதிகபட்சமாக சஞ்சீவி மற்றும் பிரபுல் தலா 6 புள்ளிகளை எடுத்தனர்.

நடப்பு புரோ கபடி தொடரில் இதுவரை விளையாடியுள்ள 14 போட்டிகளில் 10ல் வெற்றி, 2ல் தோல்வி, 2ல் டிரா என 58 புள்ளிகளுடன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மறுபுறம் 38 புள்ளிகளுடன் பெங்கால் வாரியர்ஸ் 6வது இடத்தில் உள்ளது. 

இந்த சீசனில் அதிரடியாக விளையாடி வரும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் பலம் பொருந்திய அணியாக வலம் வருகிறது. அந்த அணியை பெங்கால் வாரியர்ஸ் சாய்க்குமா? என்பதை பார்க்க சுவாரசியமாக இருக்கும். மேலும், இந்த சீசனில் இரண்டு அணிகள் மோதிய ஆட்டம் 28-28 என டிராவில் முடிந்தது. இதனால், இவ்விரு அணிகள் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment