Advertisment

வெற்றிப் பாதைக்கு திரும்புமா தமிழ் தலைவாஸ்? குஜராத் உடன் இன்று மோதல்

நடப்பு தொடரில் இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 2 வெற்றி மற்றும் 5 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் 11 புள்ளிகளுடன் 11வது இடத்தில் தமிழ் தலைவாஸ் உள்ளது.

author-image
WebDesk
New Update
Jaipur Pink Panthers vs Dabang Delhi KC and Tamil Thalaivas vs Gujarat Giants PKL Season 10 Tamil News

புரோ கபடி லீக் 2023: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - தபாங் டெல்லி; தமிழ் தலைவாஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Pro-kabaddi-league | tamil-thalaivas: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன. 

Advertisment

இந்நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன. இதனைத் தொடர்ந்து, இரவு 9 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

தமிழ் தலைவாஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ்

நடப்பு தொடரில் இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 2 வெற்றி மற்றும் 5 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் 11 புள்ளிகளுடன் 11வது இடத்தில் தமிழ் தலைவாஸ் உள்ளது. சென்னையில் அந்த அணி விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியைப் பெற்றது. மறுபுறம், குஜராத் ஜெயண்ட்ஸ் 4 ஆட்டங்களில் வெற்றி, 3 தோல்வியுடன் 23 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. 

டிசம்பர் 25 அன்று ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ் தலைவாஸ் 29-42 என தோல்வியடைந்தது. அதேவேளையில், டிசம்பர் 23 அன்று நடந்த கடைசி ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் 38-30 என உ.பி யோதாஸை வீழ்த்தியது.

நேருக்கு நேர் 

பி.கே.எல் வரலாற்றில் தமிழ் தலைவாஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிரான 4 வெற்றிகளுடன், குஜராத் ஜெயண்ட்ஸ் முன்னிலையில் உள்ளது. அதேசமயம் தமிழ் தலைவாஸ் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்தது.

முன்னதாக தமிழ் தலைவாஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் இடையேயான போட்டி தமிழ் தலைவாஸ் அணிக்கு சாதகமாக முடிந்தது. 42-39 என வெற்றி பெற்றது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Tamil Thalaivas Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment