Pro Kabaddi League: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளது. அதில் டெல்லியில் உள்ள தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோத உள்ளன. இதனையடுத்து, இன்று இரவு 9 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி கேசி - புனேரி பால்டன் அணிகள் மோத உள்ளன.
ஜெய்ப்பூர் போராட்டம் வீண்; பாட்னா வெற்றி
இன்றைய முதல் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் மற்றும் பாட்னா பைரைட்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் வெற்றி கடுமையாக மோதியதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளைப் பெற்று முன்னிலைப் பெற்றன. ஜெய்ப்பூர் கடுமையாக போராடிய நிலையிலும் பாட்னா 3 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாட்னா அணி 36 புள்ளிகளையும், ஜெய்ப்பூர் அணி 33 புள்ளிகளையும் பெற்றது. பாட்னா அணியில் அதிகபட்சமாக சச்சின் மற்றும் சுதாகர் தலா 10 புள்ளிகளை எடுத்தனர். ஜெய்ப்பூர் அணியில் அதிகபட்சமாக அர்ஜூன் 12 புள்ளிகளை எடுத்தார்.
சமனில் முடிந்த தபாங் டெல்லி – புனேரி பால்டன் போட்டி
இன்றைய இரண்டாவது போட்டியில் தபாங் டெல்லி மற்றும் புனேரி பால்டன் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இரு அணிகளும் கடுமையாக மோதின. முதல் பாதியில் டெல்லி அணி சற்று முன்னிலை பெற்று இருந்தது. இருப்பினும் இரண்டாம் பாதியில் மீண்டு எழுந்த புனேரி பால்டன் அணி சிறப்பாக விளையாடி சமன் செய்தது.
இந்தப் போட்டியில் டெல்லி மற்றும் புனே அணிகள் தலா 30 புள்ளிகளைப் பெற்றதால் ஆட்டம் சமனில் முடிந்தது. தபாங் டெல்லி அணியில் அதிகபட்சமாக அஷூ மாலிக் 8 புள்ளிகளை எடுத்தார். புனேரி பால்டன் அணியில் அதிகபட்சமாக அஸ்லாம் 10 புள்ளிகளை எடுத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“