Pro Kabaddi 2022: Jaipur Pink Panthers vs Puneri Paltan PKL 9 Final Tamil News: புரோ கபடி லீக் தொடரின் 9-வது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் மும்பையில் இன்று இரவு 8:00 அணிக்கு நடக்கும் இறுதிப்போட்டியில் சுனில் குமார் தலைமையிலான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, பசெல் அட்ராசலி தலைமையிலான புனேரி பால்டனை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிக்காக் ரசிகர்களாக ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் மிகவும் சிறப்பாக விளையாடிய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி 49-29 என்ற புள்ளிகணக்கில் அபாரமாக வீழ்த்தினர். அதே உத்வேகத்தில் இன்றைய ஆட்டத்திலும் களமாடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. அந்த அணியின் அர்ஜுன் தேஷ்வால் நம்பர் 1 ரெயிடராக வலம் வருகிறார். இதேபோல், அங்குஷ் டாப் 10 டிஃபண்டர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
THIS IS IT 🤩#vivoProKabaddi #FantasticPanga #BhidegaTohBadhega #vivoProKabaddiPlayoffs #vivoProKabaddiFinal #vivoPKL2022Final #vivoPKL2022Playoffs #JaipurPinkPanthers #PuneriPaltan pic.twitter.com/70AYjz8uqV
— ProKabaddi (@ProKabaddi) December 15, 2022
தமிழ் தலைவாஸ் அணியை 39-37 என்ற சொற்ப புள்ளிகள் கணக்கில் வீழ்த்திய புனேரி பல்டன் வித்தியாசமான வெற்றியைப் பதிவு செய்தது. போட்டியின் கடைசி 10 நிமிடங்களில் அதன் வெற்றியை உறுதி செய்தது. அந்த அணியில் பங்கஜ் மொஹிதியின் அற்புதமான ரெய்டராக இருக்கிறார். கேப்டன் பசெல் அட்ராசலி அணியின் டிஃபண்சுக்கு வலு சேர்க்கிறார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு சாம்பியனான ஜெய்ப்பூர்
நேருக்கு நேர்
நடப்பு சீசனில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் – புனேரி பால்டன் அணிகளுக்கு இடையிலான 2 லீக் ஆட்டங்களிலும் புனே அணியே வெற்றி பெற்றுள்ளது.
புரோ கபடி தொடரில் விளையாடிய 20 ஆட்டங்களில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 10ல், புனேரி பால்டன் 8ல் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டிகள் சமனில் முடிந்துள்ளன.
நேரலை ஒளிபரப்பு:
இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஓடிடி தளமான டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
பரிசுத் தொகை எவ்வளவு?
இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கோப்பையுடன் ரூ.3 கோடி பரிசாக வழங்கப்படும். 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.1.80 கோடி பரிசாக கிடைக்கும்.
ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ்
ரைடர்ஸ்: அர்ஜுன் தேஷ்வால், அஜித்
டிஃபெண்டர்கள்: சுனில் குமார், வூசன் கோ, சாஹுல் குமார், ரெசா மிர்பகேரி, அபிஷேக் கே.எஸ், ஆஷிஷ், அங்குஷ், தீபக்
ஆல்-ரவுண்டர்கள்: ராகுல் கோரக் தனவாடே
புனேரி பால்தான்
ரைடர்ஸ்: அஸ்லாம் முஸ்தபா இனாம்தார், மோஹித் கோயத், ஆதித்யா துஷார் ஷிண்டே, ஆகாஷ் சந்தோஷ் ஷிண்டே, பங்கஜ் மோஹிதே, சவுரப்
டிஃபெண்டர்கள்: ஃபசல் அத்ராச்சலி, சோம்பிர், ஆகாஷ் சவுத்ரி, பாதல் தக்திர் சிங், அபினேஷ் நடராஜன், சங்கேத் சாவந்த், அலங்கார் கலுராம் பாட்டீல், ராகேஷ் பல்லே ராம், டி மஹிந்த்ரபிரசாத், ஹர்ஷ் மகேஷ் லாட், கௌரவ் காத்ரி
ஆல்-ரவுண்டர்கள்: முகமது எஸ்மாயில் நபிபக்ஷ், கோவிந்த் குர்ஜார், பாலாசாகேப் ஷாஹாஜி ஜாதவ்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil