Advertisment

புரோ கபடி லீக்... புனே அணியை வீழ்த்தியது ஜெய்ப்பூர் : பெங்கால் அணிக்கு 5-வது வெற்றி

புரோ கபடி லீக் தொடரில் ஜெய்ப்பூரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - புனேரி பால்டன் அணிகள் சந்திக்கின்றன.

author-image
WebDesk
New Update
Jaipur Pink Panthers vs Puneri Paltan and UP Yoddhas vs Bengal Warriors Pro Kabaddi League Season 10 match updates in tamil  

புரோ கபடி லீக் 2023 - 24: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - புனேரி பால்டன்; உ.பி. யோத்தாஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Pro Kabaddi League: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.

Advertisment

இந்நிலையில், இந்த தொடரில் அடுத்தகட்ட லீக் சுற்று ஜெய்ப்பூரில் நேற்று தொடங்கியது. இதில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - புனேரி பால்டன் அணிகள் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 36-34 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டன் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் ஜெய்ப்பூர் அணி 48 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்திலும், புனேரி பால்டன் அணி 52 புள்ளிகளுடன் முதலிடத்திலும் உள்ளது. 

இதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் உ.பி. யோத்தாஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதியது. இதில் சிறப்பாக விளையாடிய பெங்கால் வாரியர்ஸ் அணி 42-37 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பெங்கால் வாரியர்ஸ் அணி 28 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்திலும், உ.ப.யோத்தாஸ் அணி 31 புள்ளிகளுடன் 10-வது இடத்திலும் உள்ளது.

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment