Advertisment

புரோ கபடி: உ.பி.யோத்தாஸ் அதிர்ச்சி... ஜெய்பூர் அபார வெற்றி; பெங்களூரு புல்ஸ்க்கு எதிராக புனேரி பால்டன் அசத்தல் வெற்றி!

விளையாட்டு: புரோ கபடி லீக் தொடரில், புதன்கிழமை நடைபெற்ற போட்டியில், உ.பி. யோத்தாஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அபார வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில், பெங்களூரு புல்ஸ் அணியை புனேரி பால்டன் வீழ்த்தியது.

author-image
WebDesk
New Update
 Jaipur Pink Panthers vs UP Yoddhas and Puneri Paltan  Bengaluru Bulls match updates PKL Season 10 Tamil

புரோ கபடி 2023: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - உ.பி.யோத்தாஸ்; புனேரி பால்டன் - பெங்களூரு புல்ஸ் அணிகள் இன்று மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

pro-kabaddi-league 2023: புரோ கபடி லீக் தொடரில், புதன்கிழமை நடைபெற்ற போட்டியில், உ.பி. யோத்தாஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அபார வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில், புனேரி பால்டன் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.

Advertisment

10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன

ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி அபார வெற்றி

இந்த தொடரில் இன்று (20.12.2023) 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. புதன்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில், உ.பி. யோத்தாஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில், ஆட்ட நேரம் முடிவில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 41 புள்ளிகளையும் உ.பி. யோத்தாஸ் அணி 24 புள்ளிகளையும் பெற்றிருந்தன. இதன் மூலம், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 17 புள்ளிகள் வித்தியாசத்தில் உ.பி. யோத்தாஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

புனேரி பால்சன் அசத்தல் வெற்றி

மற்றொரு போட்டியில், புரோ கபடி லீக் தொடரில், புனேரி பால்டன் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில், ஆரம்பத்தில் இருந்தே புள்ளிகள் குவிப்பதில் புனேரி பால்டன் அணி ஆதிக்கம் செலுத்தியது.

இறுதியில், ஆட்ட நேரம் முடிவில், புனேரி பால்டன் அணி 43 புள்ளிகளையும் பெங்களூரு புல்ஸ் அணி 18 புள்ளிகளையும் பெற்றிருந்தன. இதன் மூலம், புனேரி பால்டன் அணி 25 புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment