டெஸ்ட் போட்டியில் 600 விக்கெட் – ஜேம்ஸ் ஆண்டர்சன் உலக சாதனை! (வீடியோ)

James Anderson 600th Test Wicket: ஆட்டத்தின் 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 599 சர்வதேச டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் ஜேம்ஸ் ஆண்டர்சன்

By: August 25, 2020, 10:23:27 PM

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 583 ரன்களை அடித்து 8 விக்கெட்டுகளை இழந்த போது டிக்ளேர் செய்தது.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜாக் கிராவ்லே 267 ரன்கள் அடித்தார். அவரை தொடர்ந்து ஜாஸ் பட்லர் 152 ரன்கள் அடித்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 273 ரன்களுக்கு ஆல் – அவுட்டானது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று 141 ரன்கள் அடித்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 17 ஆவது சதத்தை பதிவு செய்தார்.

மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் ஒருவர் அடித்த 3 ஆவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

ஹனிஃப் முகமது – 187 ரன்கள்
ஜாவெட் மியாண்டெட் – 153 ரன்கள்
அசார் அலி – 141 ரன்கள்

இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் அதிரடியாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 29 ஆவது முறையாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

மேலும் இந்தப் பட்டியலில் வேகப்பந்து வீச்சாளர்களில் 3 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

ரிச்சர்ட் ஹட்லீ – 36 முறை
கிளென் மெக்ரா – 29 முறை
ஜேம்ஸ் ஆண்டர்சன் – 29 முறை

இந்த ஆட்டத்தின் 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 599 சர்வதேச டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் ஆண்டர்சன்.

இந்நிலையில், இன்று (ஆக.25) கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. மழை காரணமாக நீண்ட நேரத்துக்குப் பிறகே, இன்றைய ஆட்டம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, 31 ரன்கள் எடுத்திருந்த அசார் அலியை ஆண்டர்சன் வீழ்த்தினார். இதன்மூலம், டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை இங்கிலாந்து வீர‌ர் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார்.


டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில், முத்தையா முரளிதரன் (800), ஷேன் வார்ன் (708) மற்றும் அனில் கும்ப்ளே (619) ஆகியோருக்கு அடுத்தபடியாக 4-வது இடத்தில் ஆண்டர்சன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:James anderson 600th test wicket first fast bowler eng vs pak

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X