இங்கிலாந்தின் பிரபல யூடியூபர் டேனியல் ஜார்விஸ் என்ற ஜார்வோ, சென்னையில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான போட்டியின்போது அத்துமீறி மைதானத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் முதல் ஆட்டத்தில் இந்தியா அணி ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. இந்தப் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
பின்னர் போட்டித் தொடங்கும் முன்னர் இரு அணி வீரர்களும் தேசிய கீதத்திற்காக மைதானத்திற்குள் வந்தனர். அப்போது மைதானத்தில் 25000க்கும் அதிகமான ரசிகர்கள் கூடியிருந்தனர். தேசிய கீதம் இசைக்கப்பட்டு முடிவடைந்தப் பின்னர், இரு அணி வீரர்களும் கலைந்து செல்ல முற்படுகையில், ஜார்வா என்ற பெயரில் ஜெர்ஸி அணி நபர் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்தார்.
விராட் கோலியை நோக்கி ஓடியவரை பாதுகாவலர்கள் தடுத்து இழுத்துச் சென்றனர். அப்போதும் அவர் கோலி மற்றும் சிராஜிடம் ஏதோ சொல்லிவிட்டு சென்றார். மேலும், இதுபோன்ற விஷயங்கள் போட்டியின் வேகத்தை உடைக்க முனைந்ததால் கோலி வருத்தமடைந்தார். ஜார்வோவை மைதானத்தை விட்டு வெளியேற கோலி புரிய வைக்க முயன்றார். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதே ஜார்வா, 2021 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் மூன்று டெஸ்ட் போட்டிகளின் போதும் மைதானத்திற்குள் நுழைந்தவர்.
ஜார்வோ சேப்பாக் மைதானத்திற்குள் நுழைந்த புகைப்படங்கள் இணையத்தை உடைத்து சமூக ஊடக தளங்களில் வைரலானது. இந்தியா விளையாடும் போட்டிகளில் ஜார்வோ மைதானத்திற்குள் நுழைவது இது நான்காவது முறையாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“