இந்திய கிரிக்கெட் அணியின் இளம்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவின் பவுலில் ஆக்சனை, பாட்டி ஒருவர் இமிடேட் செய்யும் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் பவுலர்கள் தரவரிசையில் இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா, முதலிடத்தில் உள்ளார். உலககோப்பை கிரிக்கெட் தொடரில், 9 போட்டிகளில், பும்ரா 18 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
2016ம் ஆண்டில் இந்திய அணியில் நுழைந்த பும்ரா, தனது நேர்த்தியான பவுலிங், துல்லியமாக விக்கெட்டை நோக்கிய பவுலிங், தனித்துவமான பவுலிங் உள்ளிட்டவைகளால், இன்று சர்வதேச பவுலர்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். இந்த உலககோப்பை கிரிக்கெட் தொடரிலும், பும்ராவின் பவுலிங் குறிப்பிடத்தக்க வகையிலேயே இருந்தது.
பும்ராவின் பவுலிங் ஆக்சனை கண்டு வியக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.அந்தளவிற்கு பும்ராவின் பவுலிங் ஆக்சன் ஒரு தனித்துவமானது. அவரது பவுலிங் ஆக்சனை, இளைஞர்களே இதுவரை இமிடேட் செய்யாதநிலையில், கிரிக்கெட் ரசிகரின் அம்மா, பும்ராவின் பவுலிங் ஆக்சனை இமிடேட் செய்து அதனை வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
பும்ராவின் ரசிகர் ஒருவர், பும்ராவின் பவுலிங் ஆக்சனை இமிடேட் செய்யும் தனது அம்மாவின் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ, தனது நாளை மகிழ்ச்சியான நாளாக மாற்றியுள்ளதாக பும்ரா, தனது டுவிட்டர் பக்கத்ததில் பதிவிட்டுள்ளார்.