சமீபத்தில் வெளியான ஐசிசி தரவரிசையில், ஒருநாள் கிரிக்கெட்டில் நம்ம பையன் ஜஸ்பிரித் பும்ரா 719 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அதேபோல், டெஸ்ட் தரவரிசையில், பும்ரா ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.
டெஸ்ட், ஒருநாள் என கிரிக்கெட்டின் இரு முகத்தின் டாப் 10 தரவரிசையில் பும்ரா தவிர வேறு எந்த இந்திய பவுலரும் இல்லை.
சர்வதேச கிரிக்கெட்டிற்குள் அவர் காலடி எடுத்து வைத்த 2016ம் ஆண்டிலிருந்தே அவருக்கு ஏறுமுகம்தான். Replacement பந்துவீச்சாளராக வந்து தற்போது முன்னணி பந்து வீச்சாளராக மாறி விட்டார். மும்பை அணியில் அவர் அறிமுகமான காலத்தில் நடந்தவை எல்லாம் மிகவும் சுவாரஸ்யமானவை.
பாண்ட்யா ‘டூ’ கோலி – லாக் டவுனில் சாதித்த 3 இந்திய வீரர்கள்
அடுத்த போட்டியில் பெங்களூர் அணியை எதிர்கொள்ள மும்பை அணியினர் சின்னசாமி மைதானத்திற்கு வந்தனர். ஓரளவு மைதானம் ஸ்விங் பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என வேகப் பந்து வீச்சாளர்களை பந்து வீசச் சொன்னார் சச்சின். அப்போது பும்ரா மும்பை அணியில் மிகவும் புதிது. மும்பை அணிக்கான ஆடைகள் கூட எதுவும் இன்றி தனது உள்ளூர் அணியான குஜராத் ஜெர்சியில் வந்திருந்தார். சச்சின், பாண்டிங் என முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசினார் பும்ரா.
பயிற்சி முடிந்ததும் சச்சின், “இந்தப் பையன் பௌலிங்கை அடிக்கிறது கஷ்டமா இருக்கே” எனக் கூறியதாக பும்ராவிடம் கூறப்பட்டது. இதை சச்சினிடம் சென்று கேட்க பும்ராவுக்கு தயக்கம். இது உண்மைதானா என அவருக்கு தெரியவே இல்லை. ஆனால், ஆட்டம் ஆரம்பிக்கும்போது தெரிந்து விட்டது பும்ராவுக்கு. காரணம் அணியில் பும்ரா பெயர் இருந்தது.
ஆரம்பத்திலே எல்லாம் சரியாக போகுமா என்ன? பும்ரா வீசிய முதல் நான்கு பந்துகளிலேயே மூன்று பவுண்டரிகளை பறக்க விட்டார் கோலி. தடுமாறிய பும்ராவுக்கு அப்போதும் உதவ வந்தார் சச்சின். ஒரே ஒரே நல்ல பந்து போதும்… ஆட்டம் நம் பக்கம் வந்து விடும் என உத்வேகப் படுத்தினார் சச்சின். அதேபோல அடுத்த பந்தில் போல்டானார் கோலி. அறிமுகப் போட்டியிலேயே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி தன் வருகையை அறிவித்தார் பும்ரா.
அதே ஆண்டு IPL கோப்பை – அடுத்த ஆண்டு மும்பை அணியில் அதிக போட்டிகள் ஆடும் வாய்ப்பு – மீண்டும் IPL கோப்பை – அடுத்த ஆண்டு இந்திய அணியில் இடம் என இப்போது போய் விட்டார் பும்ரா. டெஸ்ட் போட்டிகளில் கூட இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் என பல நாடுகளில் தனது ஆதிக்கத்தைக் காட்டி விட்டார்.
சிறிய சறுக்கல்:
பும்ராவின் ஆகப் பெரும் பலம் அவரது ‘Unorthodox Bowling’ தான். ஆனால், அதே ஸ்டைல் அவருக்கு எதிராக திரும்புகிறதா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
நடப்பாண்டில் நியூசிலாந்து சென்றிருந்த இந்திய அணி, அங்கு பிப்ரவரி மாதம் நடந்த ஒரு நாள் தொடரில், உலகின் நம்பர் 1 பவுலர் பும்ரா, நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை. விளைவு, ஐசிசி வெளியிட்டுள்ள ஒரு நாள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த பும்ரா 719 புள்ளிகளுடன் 2ம் இடத்திற்கு பின்தங்க, அந்த தொடரில் கலந்தே கொள்ளாத நியூசிலாந்து வீரர் போல்ட் 727 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறினார்.
பிறகு, ஒரு மிக முக்கிய பிஸியோவிடமிருந்து ஒரு மிக முக்கியமான ஸ்டேட்மென்ட்டை நம்மால் காண முடிந்தது. ஆனால், அன்று அது சீரியஸாக எடுத்துக் கொள்ளப்பட்டதா என்பது சந்தேகமே.
ஈரோடு கைத்தறி போர்வையில் தோனியும் ஸிவாவும்!
“why Bumrah’s unorthodox action may not be the reason for the injury?”
என்பதே அவர் முன் வைத்த கேள்வி. அந்த பிஸியோ Andrew Leipus. இந்திய அணியின் முன்னாள் பிஸியோ. அதுமட்டுமின்றி, ஐபிஎல்-ல் கொல்கத்தா அணிக்கு பல வருடம் பிஸியோவாக பணியாற்றியவர்.
பும்ராவின் பவுலிங் ஆக்ஷனே அவருக்கு காயம் ஏற்பட்டதற்கான முக்கிய காரணமாக ஏன் இருக்கக் கூடாது? என்ற தனது கேள்வியை ஒரு பயத்துடனேயே அவர் முன்வைத்தார்.
எனினும், அவர் இந்த சோதனைகளை கடந்து ஐபிஎல் தொடரில் தனது வெயிட்டான கம் பேக் கொடுப்பார்.
2014-ம் ஆண்டு பும்ராவின் பெளலிங் ஆக்ஷனை, ஒரு பிரபல முகநூல் பக்கம் “காக்கா வலிப்பு வந்த மாதிரி” என விமர்சித்தது. இப்போது இதே பும்ராதான் தனது பந்து வீச்சால் பல பேட்ஸ்மேன்களுக்கு வலிப்பு வர வைத்துக் கொண்டிருக்கிறார்; இனியும் தொடருவார் என்றும் நம்புவோம்!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil