/tamil-ie/media/media_files/uploads/2019/03/a784.jpg)
Jasprit Bumrah effect! Kid in Hong Kong imitates - வெளிநாட்டு ரசிகர்களையும் ஈர்த்த பும்ராவின் பவுலிங்! (வீடியோ)
பொதுவாக, வேகப்பந்துவீச்சில் யார் ரோல் மாடல் என்றால், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பவுலர்களின் பெயரைச் செல்லும் ரசிகர்கள், இப்போது இந்தியாவின் பும்ராவின் பெயரை உச்சரிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
மாறுபட்ட பந்துவீச்சு ஸ்டைலினால் அவர் புகழ்பெறவில்லை. துல்லியமான யார்க்கர், டெத் ஓவர்ஸ் அட்டாக் என ஒவ்வொரு தொடரிலும் அவரது திறமையும், ஆதிக்கமும் பெரும் வளர்ச்சியைப் பெற்றுவருகிறது. இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாட்டு மண்ணிலும் தன்னால் சாதிக்க முடியும் என்பதற்கு சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் இந்தியா கைப்பற்றிய டெஸ்ட் தொடரே சான்று.
எப்பேற்பட்ட பேட்ஸ்மேனாக இருந்தாலும், பும்ரா ஓவர் வரை பொறுமை காப்போம் என்று எண்ணுவதே, இவரது ஆளுமைக்கு சான்று. 'உலகின் நம்பர்.1 பவுலராக வலம் வரும் பும்ரா, இந்தியாவுக்கு கிடைத்த விதத்தில் நாங்கள் அதிர்ஷ்டம் அடைந்தவர்கள்' என்று கேப்டன் விராட் கோலி கூறுவது அவரது திறமைக்கான பரிசு.
2018ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பும்ரா, இதுவரை 10 டெஸ்ட்களில் ஆடி 49 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுக ஆண்டிலேயே டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் எனும் பெருமையைப் பெற்று, 39 ஆண்டுகால சாதனையையும் முறியடித்தார்.
டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வரும் பும்ரா, நிச்சயம் உலக ரசிகர்களுக்கு ரோல் மாடலாக இருக்க முடியாமல் போவாரா என்ன?
ஹாங்காங்கில், பள்ளியளவில் நடந்த 13 வயதுக்குப்பட்டோருக்கான கிரிக்கெட் தொடரில், பும்ராவின் ஸ்டைலில், சிறுவன் ஒருவன் பந்து வீசி அசத்திய வீடியோ வைரலாகி வருகிறது.
March 2019Spotted in the U-13s League today - another interesting bowling action. Does this remind you of somebody? ????@Jaspritbumrah93@BCCI@ICCMediaComms@ICC#Cricket#HKCricketpic.twitter.com/A8OOfmtfPG
— Hong Kong Cricket (@CricketHK)
Spotted in the U-13s League today - another interesting bowling action. Does this remind you of somebody? ????@Jaspritbumrah93@BCCI@ICCMediaComms@ICC#Cricket#HKCricketpic.twitter.com/A8OOfmtfPG
— Cricket Hong Kong (@CricketHK) March 3, 2019
அந்த வீடியோவை ஹாங்காங் கிரிக்கெட் வாரியமே தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.