Jasprit Bumrah unlikely for IPL 2023, WTC Final Tamil News
Jasprit Bumrah likely to miss IPL 2023, WTC final Tamil News: இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக வலம் வருபவர் ஜஸ்பிரித் பும்ரா. இவர் தனது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த செப்டம்பரில் அணியில் இருந்து வெளியேறினார். இதனால், 2022 ஆம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையை தவறவிட்டார். வங்கதேசம் நியூசிலாந்து, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் இருந்தும் அவர் இந்தியாவுக்காக விளையாடவில்லை.
Advertisment
ஐ.பி.எல் 2023, WTC இறுதிப்போட்டியில் இருந்து பும்ரா விலகல்?
இந்நிலையில், பும்ரா இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மீண்டும் களத்திற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஐபிஎல் 2023 மட்டுமின்றி, வருகிற ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடக்கவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அவர் 2023 உலகக் கோப்பைக்கு அணியில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.
இதற்கு காரணம், பும்ராவின் காயம் இயற்கையில் மிகவும் மோசமானதாகவும், குணமடைய பல மாதங்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.'பும்ரா சௌகரியமாக இல்லை. மேலும் அவர் நீண்ட ஓய்வு தேவை. அவரது காயம் மற்றும் இந்திய அணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால், பிசிசிஐ பாதுகாப்பான வாய்ப்பை தேர்வு செய்கிறது. 2023 உலகக் கோப்பைக்கு அவரை தயார்படுத்த இந்திய வாரியம் ஆர்வமாக உள்ளது. பும்ரா ஒரு நல்ல பேட்டராக இருந்தால் ஆசிய கோப்பை வரவேற்கத்தக்க போனஸாக இருக்கும்'. என்று தகவல்கள் கூறுகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil