/indian-express-tamil/media/media_files/HzZfcRorCdP9Un6mcToC.jpg)
இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை கதிகலங்க செய்த பும்ரா... வரலாற்றுச் சாதனையைப் படைத்து அசத்தல்!
India vs England | Jasprit Bumrah: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், இரு அணிகளுக்கும் இடையே ஐதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வத இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 396 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இரட்டை சதம் அடித்து மிரட்டிய தொடக்க வீரரும் இளம் வீரருமான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 209 ரன்கள் எடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்சை தொடங்கிய நிலையில், அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். தொடக்க வீரர் சாக் கிராலி (76 ரன்கள்) மற்றும் கேப்டன் ஸ்டோக்ஸ் (47 ரன்கள்) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகி வெளியேறினர். முதல் இன்னிங்ஸ் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 253 ரன்கள் எடுத்து.
இந்திய அணியில் தனது மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை கதி கலங்க செய்தார். மிக அபாரமாக பந்து வீசிய பும்ரா 6 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், அக்சர் படேல் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
வரலாற்றுச் சாதனையைப் படைத்த பும்ரா
இந்நிலையில், இந்த போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தியபோது சர்வதேச டெஸ்ட் அரங்கில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்கிற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். பும்ரா இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் குறைந்த பந்துகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற மாபெரும் வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.
இந்தப் பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா (6781 பந்துகள்) முதல் இடத்திலும், உமேஷ் யாதவ் (7661 பந்துகள்) மற்றும் முகமது ஷமி (7755 பந்துகள்) ஆகியோர் 2வது மற்றும் 3வது இடத்திலும், கபில் தேவ் (8378 பந்துகள்) மற்றும் அஸ்வின் (8380 பந்துகள்) 4வது மற்றும் 5வது இடத்திலும் உள்ளனர்.
He probably won't finish near the top of the wicket-takers list in Tests (based on matches he'll likely play) but the generation that got to see Jasprit Bumrah bowl with the red ball can count ourselves blessed for witnessing his genius. The sheer thrill! pic.twitter.com/YxhhDLcGI7
— Vinayakk (@vinayakkm) February 3, 2024
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.