/indian-express-tamil/media/media_files/WU9QZ205xfINN7N3Yee3.jpg)
மும்பையைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் வீரரான சிவம் துபே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மிரட்டலாக ஆடி வருகிறார்.
IPL 2024:17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான தற்போதைய புள்ளிகள் பட்டியலின் படி, முதலிடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Top Players: Jasprit Bumrah to Virat Kohli, here are top 10 performers from each IPL teams
ராஜஸ்தான் ராயல்ஸ் - ரியான் பராக்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு வித்திட்டவர்களில் இளம் வீரர் ரியான் பராக்-வும் ஒருவர். 22 வயதான அவர் இந்த சீசனில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும், ஆரஞ்சு தொப்பிக்கான ரேஸில் விராட் கோலிக்கு அடுத்தபடியாக 2- வது இடத்தில் உள்ளார்.
போட்டிகள்: 7, இன்னிங்ஸ்: 7, நாட் அவுட்: 2, ரன்கள்: 318, அதிகபட்ச ஸ்கோர்: 84*, ஸ்ட்ரைக் ரேட்: 161.42, 50-கள்: 3
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சுனில் நரைன்
மீண்டும் கொல்கத்தாவின் கோச்சிங் செட்-அப்பை கட்டமைத்து வரும் கவுதம் கம்பீர் வித்தியாசமான சுனில் நரைனை உருவாக்கியுள்ளார். அவர் தனது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தி வருகிறார்.
போட்டிகள்: 6, இன்னிங்ஸ்: 6: நாட் அவுட்: 0, ரன்கள்: 276, அதிகபட்ச ஸ்கோர்: 109, ஸ்ட்ரைக் ரேட்: 187.75, 100-கள்: 1, 50-கள்: 1; விக்கெட்டுகள்: 7, எக்கனாமி ரேட்: 6.87
சென்னை சூப்பர் கிங்ஸ் - சிவம் துபே
மும்பையைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் வீரரான சிவம் துபே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மிரட்டலாக ஆடி வருகிறார். மைதானத்தில் மூலை முடுக்கெல்லாம் சிக்ஸர்களை பறக்கவிட்டு 'ஆறுச்சாமி' என்கிற செல்லப்பெயரைப் பெற்றுள்ளார். கடந்த சீசனைப் போலவே இந்த சீசனிலும் சிறப்பாக செயல்பட்டு அணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.
போட்டிகள்: 6, இன்னிங்ஸ்: 6, நாட் அவுட்: 2, ரன்கள்: 242, அதிகபட்ச ஸ்கோர்: 66*, ஸ்ட்ரைக் ரேட்: 163.51, 50-கள் : 2
சன்ரைசர்ஸ் ஐதராபாத் - பேட் கம்மின்ஸ்
ஒருநாள் உலகக் கோப்பையை வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ், தற்போது ஐ.பி.எல் கோப்பையை வெல்ல சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு உத்வேகம் அளித்துள்ளார்.
போட்டிகள்: 6, இன்னிங்ஸ்: 6, விக்கெட்கள்: 9, எகானமி ரேட்: 7.87
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - மயங்க் யாதவ்
இளம் வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் இரண்டே ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய பிறகு வயிற்று வலியால் அவதிப்பட்டு கடைசி இரண்டு ஆட்டங்களில் இருந்து வெளியேற வேண்டியதாயிற்று. ஆனால் அவர் தனது அதிவேக பந்துவீச்சு மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார்.
போட்டிகள்: 3, இன்னிங்ஸ்: 3, விக்கெட்கள்: 6, எகானமி ரேட்: 6.00
டெல்லி கேபிட்டல்ஸ் - ரிஷப் பண்ட்
உயிருக்கு ஆபத்தான காயத்தில் இருந்து மீண்ட பிறகு மீண்டும் கேப்டனாக களமாடி வரும் ரிஷப் பண்ட் சிறப்பான கம்-பேக் கொடுத்துள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அவரது அணிக்கு பெரிதும் உதவி வருகிறார்.
போட்டிகள்: 17, இன்னிங்ஸ்: 7, நாட் அவுட்: 1, ரன்கள்: 210, அதிகபட்ச ஸ்கோர்: 55, ஸ்ட்ரைக் ரேட்: 156.71, 50கள் : 2
மும்பை இந்தியன்ஸ் - ஜஸ்பிரித் பும்ரா
ஐபிஎல் 2024ல் ஜஸ்பிர்ட் பும்ராவை யாராலும் நிறுத்த முடியாது. தற்போது ஊதா நிற தொப்பியை வசப்படுத்துவதில் பும்ரா முன்னிலை வகிக்கிறார்.
போட்டிகள்: 7, இன்னிங்ஸ்: 7, விக்கெட்கள்: 13, எகானமி ரேட்: 5.96
குஜராத் டைட்டன்ஸ் - சுப்மன் கில்
குஜராத் டைட்டன்ஸ் இந்த சீசனில் போராடி வரும் நிலையில், அவர்களின் கேப்டன் சுப்மன் கில், அணியின் ஒரே பிரகாசமான வீரராக செயல்பட்டு வருகிறார்.
போட்டிகள்: 7, இன்னிங்ஸ்: 7, ரன்கள்: 263, ஸ்ட்ரைக் ரேட்: 151.14, 50-கள் : 2
பஞ்சாப் கிங்ஸ் - அசுதோஷ் சர்மா
அசுதோஷ் ஷர்மா ஐ.பி.எல் சீசனின் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்திய வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவர் அடிக்கடி அதிரடியாக மட்டையைச் சுழற்றி சிறப்பாக ரன்களை குவித்து வருகிறார். பேட்ஸ்மேன்கள் பொதுவாக பதற்றமடையும் இடத்தில், அசுதோஷ் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.
போட்டிகள்: 4, இன்னிங்ஸ்: 4, நாட் அவுட்: 1, ரன்கள்: 156, அதிகபட்ச ஸ்கோர்: 61, ஸ்ட்ரைக் ரேட்: 205.26
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - விராட் கோலி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் விராட் கோலி இடையே ஒரு விசித்திரமான ஒற்றுமை உள்ளது. ரன் தரவரிசையில் கோலி மீண்டும் முன்னணியில் இருக்கும் நிலையில், அந்த அணி புள்ளிகள் பட்டியலில் அடி மட்டத்தில் உள்ளது.
போட்டிகள்: 7, இன்னிங்ஸ்: 7, நாட் அவுட்: 2, ரன்கள்: 361, ஸ்ட்ரைக் ரேட்: 147.34, 100-கள்: 1, 50-கள்: 2
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us