Advertisment

வாவ்! யூத் ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் தங்கம்!

யூத் ஒலிம்பிக்கில், இந்தியா பெறும் முதல் தங்கப்பதக்கம் என்ற வரலாற்றுச் சாதனையை ஜெர்மி புரிந்திருக்கிறார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
யூத் ஒலிம்பிக்ஸ் 2018 இந்தியாவுக்கு முதல் தங்கம்

யூத் ஒலிம்பிக்ஸ் 2018 இந்தியாவுக்கு முதல் தங்கம்

யூத் ஒலிம்பிக்ஸ் 2018 : அர்ஜெண்டினாவில் நடந்து வரும் யூத் ஒலிம்பிக்ஸ் தொடரில், இந்தியாவுக்கு முதல் தங்கத்தைப் பெற்றுத் தந்திருக்கிறார் ஜெர்மி லல்ரினுங்கா.

Advertisment

அர்ஜெண்டினாவில் யூத் ஒலிம்பிக்ஸ் தொடர் கடந்த 6ம் தேதி தொடங்கியது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 3,997 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், 62 கிலோ எடைப் பிரிவில் 247 எடையை வெற்றிகரமாக தூக்கி இந்தியாவின் ஜெர்மி லல்ரினுங்கா முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம், யூத் ஒலிம்பிக்கில், இந்தியா பெறும் முதல் தங்கப்பதக்கம் என்ற வரலாற்றுச் சாதனையை ஜெர்மி புரிந்திருக்கிறார்.

இதில் இரண்டாவது இடம் (வெள்ளி) துருக்கியை சேர்ந்த டோப்டஸ் கேனருக்கும், மூன்றாவது இடம் (வெண்கலம்) கொலம்பியாவைச் சேர்ந்த எஸ்டிவீன்க்கும் கிடைத்துள்ளது.

15 வயதான ஜெர்மி இதற்கு முன்னர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பளு தூக்குதலில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார்.

தங்கப்பதக்கம் வென்ற ஜெர்மிக்கு இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

ஜெர்மி தங்கப்பதக்கம் வென்றது குறித்து ராஜ்யவர்தன் ரத்தோர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"62 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ஜெர்மி தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார். வாழ்த்துகள் ஜெர்மி. யூத் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்" என்று பதிவிட்டிருக்கிறார்.

தங்கம் வென்ற ஜெர்மிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

Sports
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment