ச. மார்ட்டின் ஜெயராஜ்
கடந்த சில தினங்களுக்கு முன்னர், கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் நடைபெற்ற 'இந்திய ஓபன் ஜம்ப்ஸ்' போட்டியில் ஆடவர் நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்று புதிய தேசிய சாதனையை படைத்தார் தமிழ்நாட்டின் தடகள வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின். சுமார் 8.42 மீட்டர் நீளத்தை தாண்டிய அவர் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் (8.41 மீ) தாண்டப்பட்ட தூரத்தை முறியடித்து அசத்தினார். அவரை நாம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். மிகவும் கலகலவென பேசிய அவர் தனது தடகள பயணத்தை நம்மிடம் விவரிக்க தொடங்கினார்.
ஜெஸ்வின் தடகளத்தில் அடியெடுத்து வைத்தது எப்படி?
சின்ன வயசுல இருந்தே ஸ்போர்ட்ஸ்-னா எனக்கு ரொம்ப இஷ்டம். அதனால, ஸ்கூல் படிக்கும்போது எல்லா ஈவென்ட்ல-யும் கலந்துப்பேன். ஸ்டெடிச விட ஸ்போர்ட்ல ரொம்ப அதிகமாக இன்ட்ரஸ்ட் இருந்துச்சு, ப்ரண்ட்ஸ் கூட அப்படியே ஜாலியா விளையாட போவேன். அப்படித்தான் என்னோட பயணம் தொடங்குச்சு.
இதையும் படியுங்கள்: மஸ்கோத் அல்வா குடும்பத்தில் இருந்து ஒரு தடகள சாம்பியன்!
தடகளம் கரியர்-ன்னு முடிவு எப்போது?
ஸ்போர்ட்ஸ் கரியரா இருந்தா ரொம்ப ஃப்ரீயா இருக்கலாம், நிறைய ஊருக்குப் போலாம், இன்னும் கத்துக்கலாம் அப்படின்னு நினச்சேன். அதனால அப்படியே கரியரா மாத்திக்கிட்டேன்.
பெற்றோர்கள் என்ன சொன்னார்கள்?
வீட்டுல அந்த அளவுக்கு யாரும் சம்மதிக்கல. ஏன்னா… எங்க வீட்டுல ஸ்போர்ட்ஸ்ல போற மொத ஆள் நான்தான். வீட்ல யாருக்கும் இந்த ஃபீல்டு பத்தி தெரியாது. அப்பறம் எல்லாரும் கொஞ்சம் பயந்தாங்க. ஆனா, அப்பாவும், பெரியாப்பாவும் நல்லா சப்போர்ட் பண்ணுணாங்க. அம்மா, பாட்டி கொஞ்சம் தயங்கினாலும், அப்பா பெரியாப்பா அவங்கள சம்மதிக்க வச்சாங்க.
ஃபேமிலி பிசினஸ் கவனிக்க சொல்லி அழுத்தம் இருந்ததா?
அந்த மாறியான எந்த அழுத்தமும் இல்லை. ஒன்னு ஸ்டெடிஸ்ல ஃபோகஸ் பண்ணனும், இல்லனா ஸ்போர்ட்ஸ்ல நல்லா விளையாடனும் சொன்னாங்க.
இதையும் படியுங்கள்: மஸ்கோத் அல்வா குடும்பத்தில் இருந்து ஒரு தடகள சாம்பியன்!
'4 பேரு நாலு விதமா' பேசுற மக்கள் உங்கள் தடகள பயணத்தில் உள்ளார்களா?
அப்படி யாரையும் நான் கடந்து வந்தது இல்ல. என் கூட இருந்த, இப்போ இருக்குற எல்லாரும் நல்லா சப்போர்ட் பண்ணுறாங்க. அதவிட, புதுசான ஆட்கள பார்த்த எனக்கு பேச புடிக்காது. நல்லா பழகுன ப்ரண்ட்ஸ்ட்ட மட்டும் தான் நான் பொதுவா பேசுவேன். சுருக்கமா சொன்னா, கொஞ்சம் தனிமை விரும்பி.
சின்ன வயது கனவு?
விண்வெளி வீரர் (astronaut) ஆகுறது தான் என்னோட ஆசையா இருந்துச்சு (புன்னகையை தவழ விடுகிறார்). பொதுவா எனக்கு ட்ராவல் பண்ண ரொம்ப பிடிக்கும். எல்லா இடத்தையும் சுத்தி சுத்தி பார்க்கனும்ன்னு தோனும். அப்படி சின்ன வயசுல இருந்துச்சு. அப்பறம் ஸ்போர்ட்ஸ்ல நல்லா பண்ணுனா நிறைய போட்டிக்கு போலாம், நிறய இடங்களை சுத்தி பார்க்கலாம், ஜாலியாக இருக்கலாம்ன்னு மாத்திக்கிட்டேன்.
தடகளத்தில் முதல் பதக்கம்?
ஃபர்ஸ்ட் மெடல் லாங் ஜம்ல தான் வாங்குனேன். அது மாவட்ட அளவிலான போட்டி. அப்ப நான் 6ம் வகுப்பு படிச்சேன். அந்த போட்டிக்கு வீட்டுல இருந்து சம்மதிக்கல. ஆனா, எங்க பி.டி சார் தெரியாம அழைச்சுட்டு போனாங்க.
மாநில - சர்வதேச போட்டிகளில் களமாடும் வீரர்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் எப்படி?
மாவட்ட - மண்டல அளவிலான போட்டில நேர்த்தியா யாரும் ஸ்போர்ட்ஸ் பண்ண மாட்டாங்க. அது கொஞ்சம் ஈசியா இருக்கும். ஆனா மாநிலம், தேசிய போட்டின்னு வரும் போது, நம்மல மாறியே நிறைய பேர் இருப்பாங்க. நம்மல விட நல்லா ட்ரைனிங் எடுத்தவங்ளாவும் இருப்பாங்க. சர்வதேசம்ன்னு வரப்ப அவங்கள விட தரமான பிளேயர்ஸ் ஆடுவாங்க. நம்மல மாறி மெடல் வின் பண்ண அவங்களுக்கும் ஆச இருக்கும்ல. அவங்களோட காம்பெடிஷன் பண்ணுறது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். அதே நேரத்துல கூடுதல் சந்தோசமாவும் இருக்கும்.
ஃப்ரீ டைம்ல என்ன பண்ணுவீங்க?
எனக்கு ஃப்ரீ டைம் அவ்வளவா கிடைக்காது. 1 டூ 2 மணி நேரம் தான் இருக்கும். அதுவும் நைட் 7 மணிக்கு அப்பறம் தான் கொஞ்சம் ஃப்ரீயா இருப்பேன். அந்த நேரத்தல வீட்ல அப்பா, அம்மா கிட்ட பேசுவேன். புடிச்ச மூவிஸ் பார்ப்பேன்.
இதையும் படியுங்கள்: மஸ்கோத் அல்வா குடும்பத்தில் இருந்து ஒரு தடகள சாம்பியன்!
தமிழ் மூவிஸ் பாக்கும் பழக்கம் உண்டா?
அவ்வளவா பார்க்க மாட்டேன். ஆனா, ஸ்போர்ட்ஸ் டாக்குமெண்டரிஸ் கொஞ்சம் நிறய பார்ப்பேன்.
பிடித்த நடிகர் இருக்கிறார்களா?
தமிழ்ல விண்டேஜ் விஜய் பிடிக்கும். அப்பறம், தனுஷ் பிடிக்கும். அவங்க மூவிஸ்லாம் ரசிச்சு பார்ப்பேன்.
பொதுவா, ஸ்போர்ட்ஸ் பிளேயர்ஸ்-க்கு மியூசிக் கேட்கும் பழக்கம் இருக்கும். அப்படி உங்களுக்கு பிடித்தது?
தமிழ்ல அனிருத் மியூசிக் எனக்கு ரொம்ப பிடிக்கும். ட்ரைனிங் டைம்ல, அப்பறம் ஈவென்ட்ஸ்-க்கு போற முன்னாடி அவரோட பி.ஜி.எம் (BGM) கேட்டுட்டு போவேன்.
தேசிய அளவிலான போட்டியில் ஒலிம்பிக் ரெக்கார்ட்டை முறியடித்துள்ளீர்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ரொம்ப சந்தோசமாக இருக்கு. ஆனா, இந்தியால தான் ரெக்கார்ட் பிரேக் பண்ணிருக்கேன். அதனால, பெரிய அச்சீவ் பண்ணுணாத எனக்கு ஃபீலிங்க் இல்லனு தான் சொல்லனும். இத நான் ஒலிம்பிக்ஸ், வேர்ல்டு சாம்பியன்ஷிப்ஸ்ல பண்ணிருந்தா மெடல் கண்டிப்பாக இருக்கும். அப்ப நான் ஃபுல் ஹேப்பியா இருந்திருப்பேன். இப்ப ஹேப்பியா இருக்கேன் ஆனா 100% இல்ல.
உங்க இன்ஸ்ப்ரேசன்?
உலக அளவில மைக் பவல் (அமெரிக்கா), இவான் பெட்ரோசோ (கியூபா) புடிக்கும். இந்தியா அளவில ஸ்ரீஷங்கர் ரொம்ப புடிக்கும். அவர எனக்கு சின்ன வயசுல இருந்தே புடிக்கும். அவரோட ஜம் எல்லாம் பார்க்க பார்க்க அவ்வளவு ஆசாயா இருக்கும். என்னோட ஈவென்ட்ஸ் முடிச்சுட்டு அவரோட வீடியோஸ் பார்ப்பேன். தமிழ்நாட்டுல குமாரவேல் பிரேம்குமார், சிலம்பரசன், சுவாமி இவங்கல்லாம் எனக்கு புடிக்கும்.
இதையும் படியுங்கள்: மஸ்கோத் அல்வா குடும்பத்தில் இருந்து ஒரு தடகள சாம்பியன்!
ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்களுக்கு உங்க டிப்ஸ்?
எல்லாருக்கும் ஸ்போர்ட்ஸ் பண்ணனும்னு ஆர்வம் இருக்கு. ஆனா, அதுக்கான வொர்க் பண்ண யாரும் தயாரா இல்ல. ஒருநாள் ட்ரைனிங் பண்ணுவாங்க, 2வது நாள் 'இன்னக்கி கொஞ்சம் கம்மியா பண்ணுவோம்'-ன்னு நினப்பாங்க. 3வது நாள் 'எனக்கு கஷ்டமாக இருக்கு' அப்படின்னு சொல்லி விட்டுருவாங்க.
என்ன பொறுத்தவரை, எல்லா நாளும் 100% கொடுக்கணும். சின்ன சின்ன விஷயங்கள நல்லா பாத்துக்கணும். சரியான நேரத்துல தூங்கணும், சாப்பிடனும். இத ஓரளவுக்கு சரியா பண்ணுனாலே நமக்கு நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். கொஞ்சம் டெடிகேட்டடா வொர்க்-அவுட் பண்ணணும்.
சில வீரர்களுக்கு போதிய வசதி இருக்காது. அவர்கள் எப்படி தங்களை இம்ப்ரூவ் பண்ணலாம்?
வசதி, வாய்ப்பு இல்லாத வீரர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிறைய உதவிகளை செய்து வராங்க. சரியான வீரர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு ட்ரைனிங் பண்ண ஒரு ப்ரோக்ராம் ப்ளான் பண்ணுறதா சமீபத்தில நான் ஸ்போர்ட்ஸ் மினிஸ்டர் உதயநிதி ஸ்டாலினை சந்திச்சப்ப சொன்னாங்க.
நான் ட்ரைனிங் எடுக்குற ஜே.எஸ்.டபிள்யூ (JSW) இன்ஸ்பயரிங் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மாறி உருவாக்க போறதா சொன்னாங்க. இங்க எல்லா வசதியும் சூப்பரா இருக்கும். இந்தியாவிலே பெஸ்ட் ப்ளேஸ்ன்னு சொல்லாம். அவங்க இங்க விசிட் பண்ணப் போறதாவும், அதில இருந்து சில ஐடீயாஸ் எடுத்து, தமிழ்நாட்டுல 2, 3 இடத்துல ரெடி பண்ணப் போறதாவும் சொன்னாங்க.
நீங்க ஜே.எஸ்.டபிள்யூ-ல இணைந்தது எப்படி?
ஆரம்பத்துல எங்க பி.டி சார்கிட்ட தான் ட்ரைனிங் பண்ணுனேன். அந்த சமயத்துல நான் மாநில, மண்டல, தேசிய அளவிலான போட்டில மெடல் வின் பண்ணிட்டு இருந்தேன். ஒருமுறை நான் தேசிய அளவிலான ஜூனியர் போட்டியில கலந்துக்க போனேன். அப்ப ஜே.எஸ்.டபிள்யூ கோச் எங்கள்ட்ட இன்ஸ்டிட்யூட் பத்தி சொன்னாங்க. ஆர்வம் இருந்தா சேர சொன்னாங்க. அந்த டைம்ல தான் எங்க வீட்ல அலோ பண்ண மாட்டேன்னு சொன்னாங்க. அப்பறம், அப்பா பெரியப்பா தான் வீட்ல பேசி சமாளிச்சாங்க.
இதையும் படியுங்கள்: மஸ்கோத் அல்வா குடும்பத்தில் இருந்து ஒரு தடகள சாம்பியன்!
உங்க கியூபா கோச் யோன்ட்ரி பெட்டான்சோ எப்படி?
எங்க கோச் ரொம்ப அனுபவம் உள்ளவர். ஒரு ஃப்ரண்ட் மாறி ஜாலியா பழகுவாரு. அவரும் சர்வதேச அளவில மெடல் பண்ணிருக்காரு. அவருக்கு தெரிஞ்சத நமக்கு கொஞ்சம் கொஞ்சம் சொல்லி தந்தாலே போதும். இப்ப அவர் கிட்ட இருந்து நிறய கத்துக்கிட்டு இருக்கோம்.
உங்களின் அடுத்த இலக்கு?
இந்த வருஷம் வேர்ல்டு சாம்பியன்ஷிப், ஏசியன் கேம்ஸ் இருக்கு. அதுல கோல்டு வின் பண்ணனும். அடுத்த வருஷம் ஒலிம்பிக்ஸ் வருது, அதுலயும் நல்லா பண்ணணும்.
8.42 ⚡️ . All time Top 5 Jump in Asia . More to come 👊🏽 will keep on Improving 😌 pic.twitter.com/CXI6Gruspe
— Jeswin Aldrin (@AldrinJeswin) March 7, 2023
21 வயதான ஜெஸ்வின் ஆல்ட்ரின் பிறந்தது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முதலூரில் தான். அவரது பெற்றோர் ஜான்சன் ஐசக் (தந்தை) மற்றும் எஸ்தர் செல்வ ராணி (தாய்) எஸ்.ஜே பேக்கரியை நடத்தி வருகின்றனர். அவர்களது பேக்கரியில் தயாராகும் ‘மஸ்கோத் அல்வா’ உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. ஜெஸ்வினுக்கு 2 சகோதரிகளும், 2 சகோதரர்களும் உள்ளனர்.
கடந்த 2021 பிப்ரவரி 26ம் தேதி அன்று நடந்த தென் மண்டல அளவிலான போட்டியில் ஜெஸ்வின் 7.97 மீட்டர் தூரம் தாண்டி தேசிய சாதனையைப் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மார்ச் 13ம் தேதி திருவனந்தபுரத்தில் நடந்த 'இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் 8.20 மீட்டர் தூரத்தைக் கடந்து முன்பு தான் பதிவு செய்த தேசிய சாதனையை முறியடித்தார்.
அதன் பிறகு, ஏப்ரல் 03ம் தேதி நடந்த நேஷனல் ஃபெடரேஷன் கோப்பை போட்டியில் 8.26 மீட்டர் தூரம் வரை தாண்டி, தனது முந்தைய 2 சிறந்த சாதனைகளையும் அவரே முறியடித்து அசத்தி இருந்தார். நம்மிடம் கூறியபடி, அவர் தற்போது சர்வதேச மற்றும் ஆசிய அளவிலான போட்டிகளுக்கு ஆயத்தமாகி வருகிறார். அவருக்கு 'இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' இணைய பக்கம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தோம்.
இதையும் படியுங்கள்: மஸ்கோத் அல்வா குடும்பத்தில் இருந்து ஒரு தடகள சாம்பியன்!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.