India vs South Africa 2nd Test Tamil News: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான கள நடுவரான மரைஸ் எராஸ்மஸ், இந்திய பந்துவீச்சாளர்களால் பல அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளார். மேலும், ஒவ்வொரு ஓவரின் போதும் இந்திய வீரர்கள் அவருக்கு ‘ஹார்ட் அட்டாக்’ கொடுக்கிறார்கள் என்று அவர் நகைச்சுவையாக பேசியுள்ளார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்டரெர்ஸ் மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த போட்டியை வெற்றி பெற இந்திய அணிக்கு 8 விக்கெட்டுகள் தேவை. அதே நேரத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற 122 ரன்கள் தேவை. 8 விக்கெட்டுகளை கைவசம் வைத்துள்ள அந்த அணி இன்று 4ம் நாள் ஆட்ட நேரத்தில் நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க, ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட் துவக்கத்தில் இருந்தே பல சுவாரஸ்யமான சம்பவங்களுடன் அரங்கேறி வருகிறது. குறிப்பாக,இரு அணி வீரர்களுக்கு இடையேயான மோதல்கள், அம்பயரின் கவனக்குறைவு என முதல் நாளில் இருந்தே ஆட்டம் பரபரப்பாக காணப்பட்டது.
நேற்று ஆட்டத்தின் 3ம் நாளின் நான்காவது இன்னிங்சில் ஷர்துல் தாக்கூரின் ஸ்பெல்லின் போது போட்டியின் தீவிரம் உச்சத்தை எட்டி இருந்தது. அப்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் தாக்கூர் வீசிய ஒவ்வொரு பந்தும் இந்தியாவுக்கு திருப்புமுனையை வழங்குவது போல் இருந்தது. இதனால் அவர் வீசிய ஒவ்வொரு பந்திற்கும் இந்திய வீரர்கள் தொடர்ந்து சத்தம்போட்டு நடுவர்களிடம் அப்பில் செய்தனர். இதனால், களநடுவராக இருந்த 'மரைஸ் எராஸ்மஸ்' அதிகமான அழுத்தத்திற்கு உள்ளனார்.
உதாரணமாக, ஐடன் மார்க்ராம்க்கு தாக்கூர் பந்து வீசிய ஒரு ஓவரில், தாக்கூர் இரண்டு எல்பிடபிள்யூக்களுக்கு அப்பில் செய்தார். இது நடுவர் எராஸ்மஸ்க்கு மிகக் கடுமையான அழுத்தத்தை கொடுத்தது. ஐடன் மார்க்ராம் 4வது பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதே பாணியைத்தான் மறுமுனையில் இருந்த டீன் எல்கர்க்கும் கடைபிடித்திருந்தார் தாக்கூர். இதனால் அதிக அழுத்தத்திற்கு உள்ளது என்னவோ நடுவர் எராஸ்மஸ் தான்.
இப்படி தொடர்ந்து கூச்சலிட்டும், சத்தம் போட்டும் இந்திய வீரர்கள் ஒவ்வொரு ஓவரிலும் அப்பில் செய்து வந்த நிலையில், "இந்திய வீரர்கள் ஒவ்வொரு ஓவரிலும் எனக்கு மாரடைப்பு கொடுக்கிறார்கள்" என்று எராஸ்மஸ் நகைச்சுவையாக குறிப்பிட்டுருக்கிறார். மைதானத்தில் கூட்டம் இல்லாததால், அவர் ஸ்டம்ப் மைக்கில் பேசியது தெளிவாகக் கேட்டது.
Umpire Marais Erasmus said to the Indian team 'you guys are giving me a bloody heart-attack every over' after heated exchange during #INDvSA !pic.twitter.com/xrYwGOQgn7
— Kumar Manish (@kumarmanish9) January 6, 2022
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.