ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், 4 டெஸ்டின் முடிவில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலையில் உள்ளது.
Advertisment
இந்நிலையில், இரு அணிகளும் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
இதில் 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 294 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 70 ரன்களும், ஜோ ரூட் 57 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி ஆர்ச்சரின் அசுர வேகத்தில் ஆட்டம் கண்டது. துவக்க வீரர்களான வார்னர் (5), ஹாரிஸ் (3) இருவரையும் ஆர்சர் வெளியேற்ற தள்ளாடியது ஆஸ்திரேலியா.
பின் வந்த ஸ்மித், லாபுஷேன் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். லாபுஷேன் 48 ரன்களில் வெளியேற, ஸ்மித் அரைசதம் கடந்து களத்தில் நிற்கிறார். ஆனால், மறுபக்கம் விக்கெட்டுகள் சரிய, 170 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளுடன் ஆடி வருகிறது ஆஸ்திரேலியா.
இந்நிலையில், ஆட்டத்தின் போது ஸ்மித் ரன்கள் ஓடிய போது, விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ தனது கைகளில் பந்தை வாங்கமலேயே பந்து கைகளுக்கு வருவது போலும், ரன் அவுட் செய்ய முயற்சிப்பது போலவும் பாவலா காட்ட, அதை உண்மையென நம்பிய ஸ்மித், உயிரை விட்டு தம் கட்டி மண்ணோடு மண்ணாக டைவ் அடித்து கிரீஸைக் கடந்து எழுந்து பார்த்தால், பந்து பேர்ஸ்டோ கையிலேயே இல்லை.