Advertisment

'கோலிய விட என் தம்பி தான் அதுல பெஸ்ட்': ஒப்பிட்டு பேசிய பாக்., வீரர்!

அவரது மூத்த சகோதரரும் முன்னாள் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர்-பேட்டருமான கம்ரான் அக்மல், டி20 உலகக் கோப்பைகளில் விராட் கோலியை விட சிறந்த புள்ளிகளைப் பெற்றுள்ளார் என்று உமர் அக்மல் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Kamran Akmal claims his brother Umar Akmal has better stats than Virat Kohli in T20 World Cups Tamil News

நடப்பு தொடரில் பாகிஸ்தான் லீக் சுற்றில் சுற்றுடன் வெளியேறிய நிலையில், அந்த அணி அடுத்து சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறுவது இதுவே முதல் முறையாகும்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Virat Kholi | T20 World Cup 2024: 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில்  கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அடுத்த சுற்றான சூப்பர் 8-க்கு இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றுள்ளன. முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான், இலங்கை வெளியேறியுள்ளன. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Kamran Akmal claims his brother Umar Akmal has better stats than Virat Kohli in T20 World Cups

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு, 34 வயதான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் தனது சட்டை இல்லாத புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். அதில், தான் எந்த அளவுக்கு ஃபிட் ஆக இருக்கிறேன் எனக் வெளிப்படுத்தும் வகையில், தனது சிக்ஸ் பேக் ஏ.பி.எஸ்-சுடன்  போஸ் கொடுத்திருந்தார். “கவனத்திற்கு, நான் உடற்தகுதியற்றவன் என்று நினைப்பவர்களுக்கு இந்தப் புகைப்படம்” என்று குறிப்பிட்டு அதனை பகிர்ந்தார். 

இந்த நிலையில், தற்போது அவரது மூத்த சகோதரரும் முன்னாள் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர்-பேட்டருமான கம்ரான் அக்மல், டி20 உலகக் கோப்பைகளில் விராட் கோலியை விட சிறந்த புள்ளிகளைப் பெற்றுள்ளார் என்று கூறி கிரிக்கெட் ரசிகர்களை கவனத்தை தனது பக்கம் திரும்பியுள்ளார். 

"எனக்கு நேற்று தான் புள்ளிவிவரங்கள் கிடைத்தன. நான் உமரைப் பற்றி பேசும்போது, டி20 உலகக் கோப்பை போட்டிகளில், விராட் கோலியை விட உமர் சிறந்த புள்ளிகளைப் பெற்றுள்ளார். 

விராட் கோலியின் பேட்டிங் மற்றும் ஆட்டம் என்று வரும்போது, ​​அவர் விராட் கோலிக்கு அருகில் கூட நிற்க முடியாது என்றாலும், டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியை விட அவர் சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டையும், அதிகபட்ச ஸ்கோரையும் பெற்றுள்ளார். ப்ரோமோஷன் பெற்றுத் தரும் பி.ஆர் கம்பெனிகள் எங்களிடம் இல்லாததால், சமூக ஊடகங்களில் எங்கள் புள்ளிவிவரங்கள் மற்றும் செயல்திறன்களைப் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. 

இந்த புள்ளிவிவரங்கள் இந்த 15 வீரர்களில் யாருடைய பெயரிலும் இருந்திருந்தால் கற்பனை செய்து பாருங்கள், இப்போது சமூக வலைதள பக்கத்தில் புயல் வந்திருக்க வேண்டும். அவர்கள் விராட் கோலியை பெரிய வீரர்கள் என்று கேலி செய்திருந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்” என்று கம்ரான் அக்மல் கூறியுள்ளார். 

டி-20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி 2009 இல் பட்டத்தை வென்ற நிலையில், 2022 இல் நடந்த தொடர் உட்பட மேலும் இரண்டு தொடர்களில் இறுதிப் போட்டியை எட்டி இருந்தது. நடப்பு தொடரில் பாகிஸ்தான் லீக் சுற்றில் சுற்றுடன் வெளியேறிய நிலையில், அந்த அணி அடுத்து சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறுவது இதுவே முதல் முறையாகும். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

T20 World Cup 2024 Virat Kholi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment