rohit-sharma | இந்தியா ஆஸ்திரேலியா உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நவ.19ஆம் தேதி நடந்தது.
இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 240 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்த இலக்கை ஆஸ்திரேலியா எளிதில் எட்டிப் பிடித்தது.
இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஆறுதல் கூறி முன்னாள் கேப்டன் கபில்தேவ் ட்விட்டர் எக்ஸ் வலைதளத்தில், “ரோகித் சர்மா நீங்கள் செயலில் எப்போதும் திறம்பட செயல்படக் கூடியவர்.
உங்களுக்காக இன்னும் பல வெற்றிகள் காத்திருக்கின்றன. இது கடினமான சூழல் என்பது எனக்குத் தெரியும். எனினும் உங்கள் உற்சாகத்தை தக்க வைத்துக் கொள்ளுங்கள். நாடு உங்கள் பின்னால் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த உலக கோப்பை தொடரில் ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர் முழுக்க 126 ஸ்டிரைக் ரேட்டில் 500 ரன்களை கடந்து காணப்பட்டார்.
எனினும் நேற்றைய இறுதிப் போட்டி இந்தியாவுக்கு சாதகமாக அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“