கோவையில் கட்டா மற்றும் குமித்தே என இரு பிரிவுகளில் நடைபெற்ற கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.
கோயம்புத்தூர் கராத்தே சங்கம் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி ஆகியோர் இணைந்து மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
/indian-express-tamil/media/post_attachments/f0081ef8-23c.jpg)
கட்டா மற்றும் குமித்தே என இரு பிரிவுகளில் நடைபெற்ற இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியே நடைபெற்ற போட்டிகளில் எல்.கே.ஜி.முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
இதில் தேர்வு செய்யப்படும் வெற்றியாளர்கள் அடுத்து மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“