Advertisment

ஐ.பி.எல்-லில் அமைதி... எஸ்.ஏ. 20-யில் அலப்பறை: இணையத்தை கலக்கும் காவ்யா மாறன் ரியாக்சன் மீம்ஸ்

காவ்யா மாறன் எஸ்.ஏ. 20 போட்டியின் போது உற்சாமாக இருப்பதும், ஐ.பி.எல். போட்டிகளின் சோகமாக இருப்பதும் போன்ற இரண்டு புகைப்படங்களை பதிவிட்டு கமெண்ட்டுகளை போட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Kavya Maran IPL vs SA20 Memes Viral After Sunrisers Eastern Cape Title Win Tamil News

எஸ்.ஏ. 20 தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் வெற்றிக்குப் பிறகு காவ்யா மாறன் தொடர்பான மீம்ஸ்கள் சமூக வலைதளத்தை கலக்கி வருகின்றன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Kavya Maran: இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அரங்கேறும் ஐ.பி.எல் (இந்தியன் பிரீமியர் லீக்) டி20 கிரிக்கெட் தொடரைப் போலவே தென் ஆப்ரிக்காவில் எஸ்.ஏ. 20 ஓவர் லீக் தொடங்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான 2-வது சீசன் கடந்த 10-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. 

Advertisment

இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த இந்த தொடரின் இறுதிப் போட்டியில் எய்டன் மார்க்ரம் தலைமையிலான நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும், கேஷவ் மகராஜ் தலைமையிலான டர்பன்ஸ் சூப்பர் ஜெயன்ட்சும் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது. 

இந்த இரட்டிப்பான மகிழ்ச்சியை அணியின் வீரர்கள் கொண்டாடித் தீர்த்தனர். ஐ.பி.எல். தொடருக்கான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் தான், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியையும் நிர்வகிக்கும் நிலையில், உரிமையாளர் காவ்யா மாறன் தனது அணியின் வெற்றியை உற்சாகமாக  கொண்டாடினார். அத்துடன் கோப்பையுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். அவை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டது. 

சன் டி.வி நெட்வொர்க் உரிமையாளர் கலாநிதி மாறன் மகள் காவ்யா மாறனுக்கு என தனி ரசிகர் கூட்டம் உள்ளது. ஐ.பி.எல். போட்டிகளின் போது தனது அணியை உற்சாகப்படுத்த வரும் அவரை பார்க்க வேண்டும் என்பதற்காகவே பல ரசிகர்கள் மைத்தினத்திற்கு விஜயம் செய்வதுண்டு. இதேபோல், டி.வி அல்லது அலைபேசி முன் தங்கள் கவனத்தை கொண்டு செல்வதுண்டு. அந்த அளவிற்கு புகழ்பெற்ற பிரபலமாக வலம் வருகிறார் காவ்யா மாறன்.

இந்நிலையில், எஸ்.ஏ. 20 தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் வெற்றிக்குப் பிறகு காவ்யா மாறன் தொடர்பான மீம்ஸ்கள் சமூக வலைதளத்தை கலக்கி வருகின்றன. ரசிர்கள் பகிர்ந்துள்ள அந்த மீம்ஸ்களில் காவ்யா மாறன் எஸ்.ஏ. 20 போட்டியின் போது உற்சாமாக இருப்பதும், ஐ.பி.எல். போட்டிகளின் சோகமாக இருப்பதும் போன்ற இரண்டு புகைப்படங்களை பதிவிட்டு கமெண்ட்டுகளை போட்டுள்ளனர். தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Kavya Maran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment