கடல் தாண்டி சென்ற காவ்யா மாறன் புகழ்… கல்யாண ப்ரொபோஸ் செய்த வெளிநாட்டு ரசிகர் – வீடியோ!

சன்ரைசர்ஸ் ஐதராபாத் உரிமையாளரான காவ்யா மாறனுக்கு வெளிநாட்டு ரசிகர் ஒருவர் கல்யாண ப்ரொபோஸ் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிறது.

Kavya Maran Marriage Proposal by a Fan at SA20 Game Tamil News
A marriage proposal for the SRH and Sunrisers Eastern Capetown owner Kavya Maran from fan.

CSA T20 League – Kavya Maran  marriage proposal Tamil News: இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் போட்டி போலவே தென் ஆப்பிரிக்காவிலும் தென் ஆப்பிரிக்க டி20 (எஸ்.ஏ டி20) போட்டிகள் இந்த ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய ஐ.பி.எல். உரிமையாளர் அணிகள் தான் இந்த தொடரில் விளையாடும் 6 அணிகளையும் வசப்படுத்தியுள்ளன. அவ்வகையில், ஐ.பி.எல். தொடருக்கான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை வாங்கி நிர்வகித்து வருகிறது.

ஐ.பி.எல். பிரபலம்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நிர்வாக இயக்குநர் நாம் அனைவரும் அறிந்த ஒருவர் தான். கேரள மாநிலம் கொச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்ற 16-வது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் போட்டிக்கான மினி ஏலத்தின் போது, ஏலம் ஒருபுறம் பரபரப்பாக செல்ல, இவரது பெயர் சமூக வலைதளமான ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்தது. அவரது கியூட் சிரிப்புகளுக்காகவே ஏலத்தை நேரலையில் காண ரசிகர்கள் குவிந்தார்கள்.

ஐ.பி.எல். போட்டிகளின் போது தனது அணியை உற்சாகப்படுத்த வரும் அவரைக் காண வேண்டும் என்பதற்காகவே பல ரசிகர்கள் போட்டியைக் காண மைத்தினத்திற்கு விஜயம் செய்வதுண்டு. இதேபோல், டி.வி அல்லது அலைபேசி முன் தங்கள் கவனத்தை கொண்டு செல்வதுண்டு. அந்த அளவிற்கு புகழ்பெற்ற பிரபலமாக வலம் வருகிறார் காவ்யா மாறன்.

சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளரும், சன் டி,வி நிறுவனர் கலாநிதி மாறனின் மகளான காவ்யா மாறனுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அவருக்காகவே தங்களது சொந்த ஊர் அணியை விட்டு விட்டு, ஐதராபாத் அணிக்காக ஆதரவு கொடுத்து வரும் ரசிகர்களும் இருக்கிறார்கள். இப்படி அவருக்காக ரசிகர்கள் செய்யும் செயல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

கடல் தாண்டி சென்ற காவ்யா புகழ்

இந்நிலையில், காவ்யா மாறனின் தற்போது புகழ் கடல் தாண்டி தென் ஆப்பிரிக்க வரை சென்றுள்ளது. அங்கு நடைபெற்று வரும் எஸ்.ஏ டி-20 தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் – பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் போது ஒரு ரசிகர் காவ்யா மாறனுக்கு கல்யண ப்ரொபோஸ் செய்துள்ளார். அந்த ரசிகர் கையில் ஏந்தியிருக்கும் பதாகையில் “காவ்யா மாறன் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா?” என்று எழுதி ஹார்ட் வரைந்து கல்யண ப்ரொபோஸ் செய்திருக்கிறார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ள நிலையில், தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்: ‘ரூ42 கோடி கையில இருந்தும் பெரிய தலைகளை விட்டுட்டியே அக்கா!’: காவ்யா மாறனை கலாய்க்கும் ரசிகர்கள்

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Kavya maran marriage proposal by a fan at sa20 game tamil news

Exit mobile version