இந்திய மற்றும் தமிழ்நாடு வுஷூ சங்கம் - மத்திய அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியோர் இணைந்து நடத்திய இதில் கர்நாடகா, கேரளா, மணிப்பூர், ராஜஸ்தான், டெல்லி என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
சான்சூ, டாவுலு என இரு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் மாணவிகள் அசத்தலாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் பதக்கங்கள் வழங்கப்பட்டது.
இதில் தேர்வு செய்யப்படும் வீராங்கனைகள் சர்வதேச அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil