Advertisment

துப்பாக்கிச் சூடு சத்தம், இடைவிடாத கெட்ட வார்த்தைகள்... தெ.ஆ-வின் முதல் கிரான்ட் மாஸ்டர்

From a childhood filled with gunshots and foul-mouths to the serenity of Chess, South Africa’s Kenny Solomon has lived a full life Tamil News: கென்னி சாலமன் செஸ் விளையாட்டில் இன்னும் அதிகமாக ஈர்க்கப்பட்டாலும், உள்ளூர் போட்டிகளில் விளையாடி வெற்றி பெறுவதைத் தவிர, அவர் தன்னை ஒரு கிராண்ட்மாஸ்டர் ஆக நினைக்கவில்லை.

author-image
WebDesk
New Update
Kenny Solomon first Grandmaster of South Africa life story

Though Kenny got even more hooked into the game, besides playing and winning local tournaments, he never fancied himself becoming a Grandmaster.

Kenny Solomon Tamil News: பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை தென்ஆப்பிரிக்காவில் அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட ஒரு புறநகர்ப் பகுதியாக கேப் டவுனின் மிட்செல்ஸ் ப்ளைன் நகர் இருந்தது. அங்கு அந்தி சாயும் போது, ​​கென்னி சாலமனின் தந்தை உள்ளே இருந்து கதவுகளைப் பூட்டி, ஜன்னல்களைத் திறக்க வேண்டாம் என்று தனது எட்டு குழந்தைகளிடமும் கூறுவார். ஆனால், வெளியே என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமுடன் இருந்த குழந்தைகள் ஜன்னல் கண்ணாடிகளில் தங்கள் காதுகளை வைத்து அந்த சத்தங்களை கேட்ப்பார்கள். சில நேரங்களில் அவர்கள் துப்பாக்கிச் சூடு, மலிவான மது பாட்டில்களின் இடைவிடாத சத்தம், இடைவிடாத கெட்ட வார்த்தைகள் மற்றும் அலறல்களைக் கேட்பார்கள். "வெறும் இரைச்சல் மற்றும் சத்தம்," என்று நினைவு கூறுகிறார், தென்ஆப்பிரிக்காவின் முதல் மற்றும் ஒரே ஒரு கிராண்ட்மாஸ்டரும், சஹாரா பெல்ட் பகுதியின் இரண்டாவது கிராண்ட்மாஸ்டருமான கென்னி சாலமன்.  

Advertisment

நிறவெறி ஓரளவுக்கு மறைந்த தென்ஆப்பிரிக்காவின்  கடைசி நாட்களில் வளர்ந்த இவர், காலையில் தெருக்கள் அமைதியாக இருக்கும்போது, தனது சகோதரர்களுடன் அங்குமிங்கும் உலாவுவார். இனிப்புக் கடைகளில் சிற்றுண்டி சாப்பிடுவார்கள். ஆனால் சூரிய வெளிச்சம் மறைந்து தெருவிளக்குகள் சிமிட்டும்போது வீட்டுக்குள் ஒளிந்து கொள்வார்கள். அந்த நேரத்தில் ​​​​விழித்தெழும் நகரம் இரவு முடியும் வரை விழித்திருக்கும். ஆனால், ஷேக்ஸ்பியரின் மீது நேசம் கொண்ட தினசரி கூலித் தொழிலாளியான அவரது தந்தை, அக்கம் பக்கத்திலுள்ள கும்பல்களுக்கு அவர்களை வெளிப்படுத்தாமல் இருக்க முடியாது என்பதை அறிந்திருந்தார். "எனவே மாலை முழுவதும், அவர் ஷேக்ஸ்பியர் மற்றும் பிற கவிஞர்களின் பாடல் வரிகளை பாடுவார்" என்று கூறுகிறார் 42 வயதான சாலமன். 

ஆனால் பூட்டப்பட்ட கதவுகளுக்கு அப்பாற்பட்ட உலகின் ஆர்வம் எப்போதும் சாலமானைத் தூண்டியது. "நான் வெளியே சென்று தெருக்களிலும் பூங்காக்களிலும் என் நண்பர்களுடன் இருப்பேன். எங்களின் சில சாகசங்களைச் செய்வேன். சில சமயங்களில் சண்டையிடுவேன். நாங்கள் ஒரு கும்பலைப் பற்றி அல்லது மற்றொன்றைப் பற்றி பேசுவோம். அல்லது அவர்களுக்கு இடையே சண்டை நடந்ததை யாரோ பார்த்ததாக சொல்வார்கள். இது எங்கள் சுற்றுப்புறத்தில் வளரும் ஒரு பகுதியாக இருந்தது," என்று அவர் கூறுகிறார்.

ஒரு நாள் உயர்நிலைப் பள்ளியில், மதிய உணவு சாப்பிடும் போது, ​​ஒரு இளைஞர் கத்தியுடன் மற்றொரு பையனை துரத்துவதைக் கண்டிருக்கிறார் சாலமன். மற்ற நாட்களில், இளைஞர்கள் துப்பாக்கிகளை ஏந்தியபடியும், இரத்தம் தோய்ந்த, மருந்து கலந்த கண்களுடன் வெறித்துப் பார்ப்பதையும் அவர் பார்த்திருக்கிறார். இதனால் அது போன்ற ஒரு கும்பலில் அவர் சேருவாரா? என்று அவருடைய பெற்றோர்கள் அவரது எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட்டனர்.

ஆனால் அப்போதுதான் அவரது சகோதரர்களில் ஒருவரான மேக்ஸ்வெல் மணிலாவில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தகுதி பெற்றார். குடும்பம் முழுதும் அவர்களை விமான நிலையத்தில் பார்க்கச் சென்றது. "அது பெரியது என்று நான் நினைத்தேன். நான் செஸ் கற்க வேண்டும் மற்றும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும். உண்மையில் எனக்கு ஏழு வயதாக இருந்தபோது மற்றொரு சகோதரர் கிரஹாம் எனக்கு நகர்வுவுகளைக் கற்றுக் கொடுத்தார். ஆனால் நான் மிகவும் ஆர்வமாக இல்லை. அன்று இரவு நான் வீட்டிற்கு வந்து, மேக்ஸ்வெல்லின் அலமாரியில் இருந்து ஒரு செஸ் புத்தகத்தை எடுத்து விளையாட ஆரம்பித்தேன்," என்று சாலமன் கூறுகிறார்.

அந்த தருணத்திலிருந்து, செஸ் சாலமனை தொற்றிக்கொண்டது. “புத்தகத்தில் காட்டப்பட்ட விளையாட்டுகளை என்னால் நிறுத்த முடியவில்லை. இது அனடோலி கார்போவின் கலெக்டட் கேம்ஸ். பின்னர் மேக்ஸ்வெல் மணிலாவிலிருந்து திரும்பியபோது, ​​அவர் என்னை தனது இறக்கைகளின் கீழ் அழைத்துச் சென்றார், ”என்று அவர் விவரிக்கிறார்.

அது முதல் சாலமனின் வாழ்க்கை மாறியது. அவர் பெரும்பாலும் வீட்டிற்குள் இருந்தார். அவரது நண்பர்கள் ஜன்னல் கண்ணாடிகளைத் தட்டி சத்தமாக விசில் அடிப்பார்கள். ஆனால் அவர் கவலைப்பட மாட்டார். அதுவே அவரது பெற்றோரின் மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஆனால் அவர்களது மூன்று அறைகள் கொண்ட குடியிருப்பில் ஒரு குறுகிய அறையின் மூலையில், வருங்கால கிராண்ட்மாஸ்டர் தனது நகர்வுகளை திட்டமிட்டுக்கொண்டிருந்தார் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. "எனது சொந்த எதிர்காலத்தை நான் உருவாக்கவில்லை என்றால், நான் இந்த காட்சியில் ஒரு சிப்பாய் ஆகிவிடுவேன் என்பதை உணர்ந்தேன். வன்முறை, ஒடுக்குமுறையான கும்பல்களின் சுழற்சியில் சிக்கிக்கொள்வேன்," என்று அவர் கூறுகிறார்.

இந்த விழிப்புணர்வு நிறவெறி சகாப்தத்தின் முடிவோடு ஒத்துப்போனது மற்றும் தென்ஆப்பிரிக்காவில் உள்ள வெள்ளையர் அல்லாத சமூகங்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை இருந்தது. சுதந்திரம் இருந்தது. இதனிடையே சாலமன் மிட்செல்ஸ் சமவெளியில் உள்ள ஒரு செஸ் கிளப்பில் சேர்ந்தார். அங்கு "வெள்ளையர்கள்" ஒரு நூலகத்தில் பிளிட்ஸ் விளையாடுவதற்கு கூடினர். "ஒரு புதிய உலகம் எனக்குள் திறக்கப்பட்டது. போட்டிகளுக்கான பயணம் மற்றும் வெவ்வேறு நபர்களைச் சந்திப்பது வாழ்க்கை மற்றும் சதுரங்கம் இரண்டையும் பற்றிய எனது எல்லைகளை விரிவுபடுத்தியது. நிறவெறியின் கருப்பு மற்றும் வெள்ளை வகைப்பாட்டிற்கு அப்பால் பார்க்க விளையாட்டு எனக்கு உதவியது. இது நிறைய விஷயங்களை முன்னோக்கில் வைக்கிறது, ”என்று சாலமன் கூறுகிறார். கருப்பு-வெள்ளை விளையாட்டு வெளி உலகில் சாம்பல் நிறத்தை வெளிப்படுத்தியது.

கென்னி சாலமன் விளையாட்டில் இன்னும் அதிகமாக ஈர்க்கப்பட்டாலும், உள்ளூர் போட்டிகளில் விளையாடி வெற்றி பெறுவதைத் தவிர, அவர் தன்னை ஒரு கிராண்ட்மாஸ்டர் ஆக நினைக்கவில்லை. "சர்வதேச செஸ்ஸுக்கு அதிக வாய்ப்புகள் இல்லாததால், அது மிகவும் கடினமாக இருந்தது மற்றும் நிறைய பொறுமை மற்றும் விடாமுயற்சி தேவைபட்டது.  நான் ஒவ்வொரு நாளும் செஸ் ஆட்டம் குறித்து படித்தேன். அதே நேரத்தில் அனைத்து உள்ளூர் போட்டிகளிலும் விளையாடினேன் மற்றும் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் சர்வதேச போட்டிகளுக்கு தகுதி பெற என்னால் முடிந்த அளவு முயற்சி செய்தேன். அதனால் இயல்பாகவே, என் முன்னேற்றம் மெதுவாக இருந்தது. ஆனால் நான் ஒருபோதும் கைவிடவில்லை, ”என்று அவர் நினைவு கூர்ந்தார்.

அப்போதுதான் சாலமனுக்கு விதி ஒரு தொடக்கத்தை கொடுத்தது. "நான் 1998 இல் ஒரு போட்டியில் இத்தாலியைச் சேர்ந்த ஒரு செஸ் வீரரை சந்தித்தேன். நாங்கள் தொடர்பை இழந்திருந்தோம். பின்னர் 2006 இல் ஒரு போட்டியில் அவரை மீண்டும் பார்த்தேன், நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். நான் அவளுடன் வெனிஸ் சென்றேன். எனது நாட்டை விட்டு வெளியேறுவது கடினமாக இருந்தது. ஆனால் ஐரோப்பா செஸ் போட்டிகளுக்கு சிறந்தது என்று நான் நினைத்தேன். நிச்சயமாக நீங்கள் உங்கள் மனைவியுடன் இருக்க விரும்புகிறீர்கள்,” என்று அவர் கூறுகிறார்.

ஐரோப்பாவின் சிறந்த சூழல், மேலும் அதிக போட்டிகள், அதிக விளையாட்டுகள் என்று தொடர்ந்த சாலமன், இறுதியில் தனது கிராண்ட் மாஸ்டர் (GM) விதிமுறைகளை 2014 இல் முடித்தார். “இது எனக்கு ஒரு ஆழ்ந்த உணர்ச்சிகரமான தருணம், மேலும் முழு பயணமும் என் மனதில் பறந்தது. நான் என் பெற்றோர், சகோதரர்கள் மற்றும் மிட்செல் சமவெளி பற்றி நினைத்தேன். என் அம்மா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அவர் எங்களை வளர்க்க நிறைய போராடினார். ஆனால் அதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பே என் தந்தை இறந்துவிட்டார்,” என்று சாலமன் கூறுகிறார்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மிட்செல் ப்ளைன்ஸில் அந்த நாட்கள் வெகு தொலைவில் இருந்தாலும் அவர் மனதில் தெளிவாகத் தெரிகிறது. “உங்கள் குழந்தைப் பருவத்தைப் போல வீடு என்று எதுவும் இல்லை. வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், உங்களில் ஒரு பகுதி அங்கேயே இருக்கும், ”என்று சாலமன் கூறுகிறார். இப்போது அவரது முழு பயணமும் அவர் கண்களுக்கு முன்னால் பளிச்சிடுகிறது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Chess Sports International Chess Fedration South Africa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment