Kenya Open Chess Championship Tamil News: கென்யா ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் கென்யாவின் நைரோபியில் உள்ள சரித் எக்ஸ்போ மையத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் 22 செஸ் கூட்டமைப்புகளைச் சேர்ந்த 450 வீரர், வீராங்கனைகள் கலந்து விளையாடி வருகின்றனர். போட்டிக்கான பரிசுத் தொகையாக 42,000 அமெரிக்க டாலர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பிரிவில் 10 பரிசுகள் உள்ளன. இதில் முதல் பரிசாக 500,000 கென்யா ஷில்லிங்ஸ் (3,815 டாலர்கள்) வழங்கப்பட உள்ளது. மேலும், ஓபன் பிரிவுவுக்கு முதல் பரிசு ஒரு மில்லியன் கென்ய ஷில்லிங்ஸ் (7,630 டாலர்கள்) வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், இந்த பெரும் பரிசுத்த தொகைக்கு ஆசைப்பட்ட கென்ய வீரர் ஒருவர் முஸ்லீம் பெண் போல் ‘ஹிஜாப்’ அணிந்து செஸ் ஆடியுள்ளார். அவரின் நகர்வுகளை கவனித்த அதிகாரிகள் அவரது அடையாளத்தை சோதிக்கையில், அவர் பெண் அல்ல ஆண் என்பது அமபலமாகியுள்ளது. இதனால் அவருக்கு 3 ஆண்டுகளுக்கு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த கென்ய வீரர் பெண்கள் பிரிவில் ‘மிலிசென்ட் அவுர்’ என்ற பெயரில் வீராங்கனை பதிவு செய்துள்ளார். அவர் உகாண்டாவின் முன்னணி வீரராங்கனையான அம்பெய்ரா ஷகிராவிடம் (மதிப்பீடு 1702) தோற்கும் முன், முன்னாள் தேசிய சாம்பியனான குளோரியா ஜம்பாவுக்கு (மதிப்பீடு 1487) எதிரான வெற்றி உட்பட, தொடர்ச்சியாக இரண்டு ஆட்டங்களை வென்றுள்ளார். இது அதிகாரிகளுக்கு பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அவரை கைப்பிடியாக பிடித்த பிறகு, தனது தவறை ஒப்புக்கொண்ட அவர், தனக்கு ஏற்பட்ட நிதி சிக்கல்களில் மீளவே இந்த மோசடியை நிகழ்த்தியாக கூறியுள்ளார்.

இதுகுறித்து போட்டியின் அமைப்பாளரும் கென்ய செஸ் கூட்டமைப்பின் தலைவருமான பெனார்ட் வஞ்சாலா பேசுகையில், “அவரது அடையாளத்தை மறைக்க, அவர் ஒவ்வொரு நாளும் ‘ஹிஜாப்’ அணிந்திருந்தார். அதனால் அவரது கண்ணாடி மற்றும் கண்கள் மட்டுமே தெரியும். ஆட்டம் முடிந்த பிறகு யாரிடமும் பேச மாட்டார். போட்டிக்கு பதிவு செய்யும் போது அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பேப்பரில் தான் தனது பெயரை எழுதினார்.” என்று கூறியுள்ளார்.
தலைமை நடுவர் ஆண்டனி கியோங்கா கூறுகையில், “ஊழியர்கள் ஆரம்பத்தில் ஒரு மரபுவழி முஸ்லீம் பெண்ணுடன் பழகுவதற்கான சாத்தியக்கூறுகளை கணக்கில் எடுத்துக்கொண்டதால், தலையிடுவதில் கவனமாக இருந்தனர். இருப்பினும், போட்டி நடந்து கொண்டிருந்தபோது, குறித்த நபர் ஒற்றைப்படை நடைபாதையைக் கொண்டிருப்பதையும், பொதுவாக ஆண்கள் பயன்படுத்தும் காலணிகளை அணிந்திருப்பதையும் வீரர்கள் மற்றும் நடுவர்கள் இருவரும் கவனித்தனர். 4வது சுற்றுக்குப் பிறகு, அவரை ஒரு தனி அறைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தோம். அங்கு அவர் அடையாள ஆவணத்தைக் கேட்டோம் அப்போது அவர் பல்கலைக்கழக மாணவர் என்பது தெரிய வந்தது.” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil